fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அட்லீயை விட தரை மட்டத்திற்கு சென்ற முருகதாஸ்.. தயாரிப்பாளர்களின் தலையாட்டி பொம்மையாக மாறிய அவலம்

murugadoss-atlee

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட்லீயை விட தரை மட்டத்திற்கு சென்ற முருகதாஸ்.. தயாரிப்பாளர்களின் தலையாட்டி பொம்மையாக மாறிய அவலம்

தளபதி விஜயின் வெற்றி இயக்குனர்கள் பட்டியலில் அட்லீ மற்றும் முருகதாஸுக்கு பெரும் பங்கு உண்டு.  மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கும் தளபதி விஜய் தனது அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கிவிட்டார்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தளபதியை வைத்து  துப்பாக்கி, கத்தி,சர்க்கார் போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். முருகதாஸ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு மகேஷ்பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளிவந்த ஸ்பைடர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. ஏனென்றால் இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் 120 கோடியாம். இதனால் ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் தளபதி விஜயுடன் இணைந்து சர்க்கார் படத்தின் மூலம் பிரம்மாண்ட வெற்றி கொடுத்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. வசூல் இல்லாததால் பல பிரச்சினைகளை சூப்பர் ஸ்டார் மற்றும் முருகதாஸ் சந்தித்தனர். முருகதாஸின் அடுத்த இலக்கு அல்லு அர்ஜுனை வைத்து லைகா தயாரிப்பில் இருந்ததாம், ஆனால்  தர்பார் படத்தின் தோல்வியினால் அந்த வாய்ப்பு கைநழுவி விட்டது.

இதனால் மீண்டும் தளபதி விஜய்யிடம் தஞ்சம் அடைந்துள்ளார் முருகதாஸ். இந்த நிலையில் தளபதி 65 படத்தை  பிளாக்பஸ்டர் படமாக தருகிறேன் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று தளபதியிடம் கேட்டுள்ளாராம். தளபதி விஜய்யும் சரி என்று ஒப்புக் கொண்டுள்ளார், இப்படி பல பிரச்சனைகளை தாண்டி தான் தற்போது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளனர்.

சரி இப்போ இதனால அட்லீ மேல முருகதாஸுக்கு என்ன கொலைவெறி என்று பார்த்தால், எப்போதுமே பட்ஜெட்டை போட்ட பின் சன் பிக்சர்ஸ் சரிபார்ப்பது வாடிக்கைதான், அதனால் அதிக பட்ஜெட்டாக உள்ளது குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளனர். ஏனென்றால் தளபதி விஜயின் சம்பளம் 80 கோடி இதனுடன் சேர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் என் சம்பளம் 30 கோடி மொத்தத்தில் 110 கோடி இதிலேயே போய் விட்டதாம்.

தற்போது பட்ஜெட்டை குறைப்பதாக இருந்தால் என்ன செய்வது என்று தலை சுற்றி போன முருகதாஸ் தனது சம்பளத்தை குறைத்து விட்டாராம். அதாவது 30 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த முருகதாஸ் தற்போது தளபதியின் 65வது படத்திற்கு 18 கோடி தான் சம்பளம்.

அட்லி கடைசியாக எடுத்த படத்தில் வாங்கிய சம்பளம் 25 கோடி இதனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது முருகதாஸ் 7 கோடி குறைவாக தான்  வாங்க உள்ளாராம். தன்னை விட சின்ன பையனாக இருந்தாலும் பிரஸ்டீஜ் என்று பார்க்கும்போது உச்சக்கட்ட கோபத்தில் உள்ளாராம்.

எது  எப்படியோ சினிமா வெற்றி பெற்ற இயக்குனர்களையும் நடிகர்களையும் மட்டும்தான் நினைவில் வைத்துக்கொள்ளும், அந்தவகையில் முருகதாஸின் சினிமா வாழ்க்கை இந்த படத்தின் வெற்றியை பொறுத்துதான் இருக்குமாம். விரைவில் இந்த படத்தின்  படம் பூஜை போட உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top