ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் தல அஜித்தை வைத்து தீனா என்ற ரவுடி மையமாக வைத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர். அந்த வெற்றியைப் அடுத்து ரசிகர்கள் மீண்டும் எப்போது சேர்வார்கள் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இதுமட்டுமில்லாமல் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் அஜித்குமார் தான்.

mirattal-ajith
mirattal-ajith

கஜினி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் முதலில் அஜித்துக்கு கமிட் செய்து அதனை படமாக்க உள்ளதாக கூறியுள்ளார். அந்த படத்திற்கு ‘மிரட்டல்’ என்று பெயர் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது.  பின்பு இந்த படம் சூர்யாவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வெளியிடப்பட்டது, ஹிந்தியிலும் வெளியிடப்பட்டது.

அஜித் காத்திருக்க சொன்னார் ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் காத்திருக்காமல் சூர்யாவை வைத்து எடுத்து விட்டார். இதுதான் ஏ.ஆர்.முருகதாஸ் மீது அஜித்துக்கு கோபம் என்று கூறலாம். இப்போது செய்த தவறுக்காக தல அஜித்தின் கால் சீட்டிற்காக ஏ.ஆர்.முருகதாஸ் காத்துக்கொண்டிருக்கிறார். இதுதான் தல அஜித்தின் மாஸ் என்றே கூறலாம்.

ஏ.ஆர்.முருகதாஸ் சர்கார் படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் எடுக்க போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இப்பொழுது ஒரு பேட்டியில் அவர் கூறுகையில் அஜித்திற்கு ஒரு மாசான கதையை ரெடி செய்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.அஜித் எப்போது ரெடி ஓகே என்று சொல்கிறாரோ அன்றே படம் எடுப்பதற்கான முயற்சியில் இறங்கி விடுவேன் என்று கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  24 மணி நேரத்தில் அஜித்தின் விஸ்வாசம் செய்த பிரமாண்ட சாதனை.!

தல அஜித் இப்பொழுது விஸ்வாசம் படத்தை அடுத்து இயக்குனர் வினோத் படத்தில் நடிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் இப்பொழுது தல அஜித் இதில் கமிட்டான போகிறார் என்று சினிமா வட்டாரங்களில் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். அஜித்தின் ரசிகர்களுக்காக கண்டிப்பாக ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து படம் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் படித்தவை:  இமையமலையில் இன்னொரு சிங்கம்.! அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.!