Connect with us
Cinemapettai

Cinemapettai

darbar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இது என்னடா தர்பாருக்கு வந்த சோதனை.. போலீசிடம் ஏ.ஆர்.முருகதாஸ் தஞ்சம்

கடந்த பொங்கலுக்கு வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற தர்பார் படத்தின் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாசுக்கு வினியோகஸ்தர்கள்  மிரட்டல் விடுவதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பெயரில் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மெட்ராஸ் ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதாவது விநியோகஸ்தர்கள் 70 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக   லைக்கா நிறுவனத்திடம் முறையிடப்பட்டது.

ஆனால்  லைக்கா நிறுவனம் படம் ரிலீஸ் ஆனதில் இருந்து மேலும் ஒரு வாரம்  நீட்டிக்க சொன்னார்களாம், ஆனால் ஒரு வாரம் கழித்து ரசிகர்கள் கூட்டம் குறைந்ததால் பெரும் நஷ்டத்தில் இருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த சமயத்தில் லைக்கா நிறுவனத்தை முறையிடும் போது எங்களுக்கும் 65 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் லைக்கா நிறுவனம் அதிக சம்பளம் வாங்கிய ரஜினி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸை சந்திக்கும்படி கைவிரித்துவிட்டனர். இதனால் ரஜினியை சந்திக்க இயலாத விநியோகஸ்தர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்திருந்தனர்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுக்கு மிரட்டல்  வந்து கொண்டிருப்பதாக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மெட்ராஸ் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி விளக்கமளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் தர்பார் படம் பிளாப் என்பதை ஏ.ஆர்.முருகதாஸை ஒப்புக்கொண்டுள்ளார் என்ற குழப்பத்தில் தலை சுற்றி போயுள்ளனர் ரசிகர்கள்.

இந்த பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்க தமிழக அரசு அல்லது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்வந்தால் மட்டுமே சுமுகமாக முடியும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top