Tamil Cinema News | சினிமா செய்திகள்
இன்னும் ஏன் மும்பையில் இருக்கீங்க, சீக்கிரம் சென்னை கிளம்பி வாங்க – அனுராக் காஷ்யப்பிடம் வேண்டுகோள் வைத்த முருகதாஸ் !
இமைக்கா நொடிகள்
சஸ்பென்ஸ் திரில்லர் ஆக வெளியாகி பட்டயகிளப்பும் படம். நயன்தாரா , விஜய் சேதுபதி , அதர்வா , ராசி கண்ணா என பலர் இருந்தாலும் நம் அனைவரையும் தன் மிரட்டல் நடிப்பால் அதிகம் கவர்ந்தது அனுராக் காஷ்யப் தான். கெத்து போலீஸ் மார்ட்டின் ஆக கொடூர வில்லன் ருத்ரா என்று மனிதர் நடிப்பில் அசதி இருப்பார்.
பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் அனுராக் பிஸியாக இருப்பவர் . எனினும் நம் முருகதாஸ் தான் தன் சிஷ்யர் இயக்குனர் அஜய் ஞானமுத்து மற்றும் அனுராக் இணைய பெரிய பங்கு ஆற்றியுள்ளார். (ஹிந்தி அகிரா படத்தில் முருகதாஸ் மற்றும் அனுராக் இணைந்து பணியாற்றினர்.) இயக்குனர் மகிழ் திருமேனி குரல் கொடுக்க தன் பாடி லாங்குவேஜ் மூலம் அசத்தி விட்டார் அனுராக்.
@anuragkashyap72 Sirrrr…why are you still in Mumbai? It’s high time to come to chennai! What claps and whistles in the theatres for you! Tamil industry needs a villain like you! ?? #ImaikkaaNodigal
— A.R.Murugadoss (@ARMurugadoss) September 1, 2018
இந்நிலையில் படத்தை பார்த்த முருகதாஸ் தன் ட்விட்டரில் பாராட்டியுள்ளார். “அனுராக் காஷ்யப் சார் இன்னும் ஏன் மும்பையில் இருக்கீங்க? நீங்கள் சென்னை வரவேண்டும். தியேட்டரில் நீங்கள் வரும் காட்சிகளின் போது செம க்ளாப்ஸ் மற்றும் விசில் . தமிழ் சினிமாவுக்கு உங்களை போல வில்லன் தேவை” என்று கூறியுள்ளார்.
என்ன தான் நடிகராக மனிதர் ஹிட் அடித்தாலும், அதன் வெற்றியை கொண்டாட நேரம் இல்லமால் தான் அமிதாப் பச்சன் – டாப்ஸி வைத்து இயக்கியுள்ள “மன்மர்சரியன்” பட வேளைகளில் பிஸியாக உள்ளார்.
Thank you sir.. too much work here. https://t.co/JZP0DAV3Pe
— Anurag Kashyap (@anuragkashyap72) September 1, 2018
மேலும் வில்லன் ருத்ரா தன் நன்றியை அனைவ்ருக்கும் தெரிவித்துள்ளார்.
Finally saw #Imaikkaanodigal .. loved every bit of it. So proud @AjayGnanamuthu @rdrajasekar @Atharvaamurali @NayantharaU @VijaySethuOffl @RaashiKhanna @hiphoptamizha @theedittable and thank you Magizh Thirumeni sir for giving Rudra the voice and soul. Thank you.
— Anurag Kashyap (@anuragkashyap72) September 1, 2018
இயக்குனர் முருகதாஸும் தன் சிஷ்யனை நினைத்து பெருமை படுவதாக சொல்லியுள்ளார்.
Proud moment ? https://t.co/bPOgfhdkfg
— A.R.Murugadoss (@ARMurugadoss) August 31, 2018
