sarkar-murugadoss-vijay
sarkar-murugadoss-vijay

சர்கார்

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் விஜயின் அரசியல் நோக்கை மைய்யமாக வைத்து எடுத்து தீபாவளியன்று ரிலீஸ் ஆகியுள்ள படம். அரசு இலவசமாக கொடுக்கும் பொருட்களை எரிப்பது, அரசியல் காட்சிகளை தாக்குவது, பாப்பா என வரலக்ஷ்மி ரோலுக்கு பெயர் வைத்தது என பல விஷயங்கள் படத்தில் அடங்கியுள்ளது.

sarkar-bjp
sarkar-bjp

படம் வன்முறையை தூண்டுகிறது என ஒருபக்கம், அடாவடியாக பாணர் கட் அவ்ட் கிழிப்பது, சில சீன்களை நீக்குவது என்று பல குளறுபடிகள். திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது, காட்சிகள் நீக்கப்பட்டு நாளை பிற்பகல் முதல் மீண்டும் படம் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரவு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸை கைது செய்வதற்காக அவர் வீட்டிற்கு போலீசார் சென்றதாக சன் பிக்ச்சர்ஸ் தங்கள் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டினார்.

காவல் துறையினர் தனது வீட்டின் கதவை பலமுறை தட்டியாகவும், நான் தற்போது வீட்டில் இல்லை எனவும், தற்போது எந்த காவலரும் தனது வீட்டின் முன்பு இல்லை என ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.

இந்நிலையில் காவல்துறை இந்த செயலிற்கு மறுப்பு தெரிவித்து ள்ளது. முருகதாஸை கைது செய்வதற்காக செல்லவில்லை , வழக்கமான ரோந்து பணிகளுக்காகவே சென்றதாகவும் காவல்துறை சார்பில் விளக்கம் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

திரைத்துறையை சேர்ந்த பலர் இயக்குனருக்கு ஆதரவாக நேற்று அவர் வீட்டிற்கு சென்றுள்ளனர் என்பது குறிபிடித்தக்கது.