Sports | விளையாட்டு
ஐபிஎல் ஏலத்தில் ஸ்ரீசாந்த், அர்ஜுன் டெண்டுல்கர்- ஆரம்ப விலை என்ன தெரியுமா? ஜாதவ் உமக்கு குசும்பு தான் ஒய்
மிகவும் குறுகிய கால இடைவெளியில் நடக்கும் ஐபிஎல் சீசன் இதுவாக தான் இருக்கும். 2020 சீசன் முடிந்துவிட்டது, அடுத்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் நடத்தும் வேலைகளை பிசிசிஐ ஆரம்பித்துவிட்டது. 10 டீம்கள் இருக்கும், மெகா ஏலம் நடக்கும் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் 8 டீம்களுடன் தான் போட்டிகள் நடக்கப்போகிறது. மேலும் பிப்ரவரி 18 ஏலம் நம் சென்னையில் 3 மணிக்கு நடக்க உள்ளது.
1097 வீரர்கள் தங்களை இந்த ஏலத்திற்கு பதிவு செய்துள்ளனர். 814 இந்தியர்கள் மற்றும் 283 வெளிநாட்டு வீரர்கள். அணைத்து டீமக்களுக்கு சேர்த்து அதிகபட்சமாக 61 இடங்கள் நிரப்ப முடியும், இதில் 22 வெளிநாட்டு வீரர்களை எடுக்க முடியும்.
அதிக எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிச்சேல் ஸ்டார்க், மற்றும் இங்கலாந்தின் ஜோ ரூட் தொடரில் பங்கேற்க விருப்பம் இல்லாமல் விளகியுள்ளனர்.
வெளிநாட்டு வீரர்கள் லிஸ்டில் மாக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்க் வுட், மொயின் அலி, காலின் இன்கிரம், சாம் பில்லிங்ஸ், பலன்கட், ராய், சாகிப் அல் ஹசன் தங்கள் ஆரம்ப விலையாக 2 கோடி லிஸ்டில் பதிவு செய்துள்ளனர். ஆச்சர்ய படுத்தும் வகையில் சி எஸ்கே ரிலீஸ் செய்த ஹர்பஜன், கேதார் ஜாதவ் தங்களை 2 கோடி ரேஞ்சில் பதிவு செய்துள்ளனர்.

CSK
தடைக்கு பின் ஸ்ரீசாந்த், நம் உள்ளூர் டி 20 போட்டியில் ஆடினார். அவர் தன்னை 75 லட்சம் என்ற ஆரம்ப விலையில் பதிவிட்டுள்ளார். தன்னை இரண்டு, மூன்று டீம்கள் தொடர்பு கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சச்சின் அவர்களின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தன்னை 20 லட்சம் லிஸ்டில் பதிந்துள்ளார். இடது கை வேகப்பந்துவீச்சாளர் மற்றும் அதிரடி பேட்டிங் ஆடும் திறன் உடையவர் அர்ஜுன். இம்முறை இவர் சயீத் முஸ்தாக் அலி போட்டியில் மும்பை அணிக்காக விளையாடினார். கடந்த சில வருடங்களாகவே இவர் மும்பை இந்தியன்ஸ் டீமுடன் பயிற்சியில் ஈடுபட்டும் வருகிறார். எனவே ஏலத்தில் இவரை மும்பை கட்டாயம் எடுத்துவிடும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா 50 லட்சம், மற்றும் விஹாரி 1 கோடி என்ற விலையில் ஏலத்தில் பதிந்துள்ளனர்.
