Sports | விளையாட்டு
அர்ஜுன் டெண்டுல்கர் பௌலிங் வேகம் தெரியுமா? பாராட்டித் தள்ளிய பிரபல ஆஸ்திரேலிய வீரர்
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடதுகை பவுலர் என்று நமக்கு தெரியும். இவர் வீசும் வந்து எவ்வளவு வேகத்தில் சென்றடைகிறது என்றால் 130KM/Hr.
இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ்க்கு காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்ததில் நடை பெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய பந்தில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான கிளென் மெக்ராத் தற்போது மும்பைக்கு வந்து உள்ளார். அவர் அண்டர் 19 போட்டியாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். அர்ஜுன் டெண்டுல்கர் பவுலிங்கை பார்ப்பதற்கு காத்துக் கொண்டிருப்பதாகவும் மிகவும் ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பதை நிரூபிக்கும் வகையில் அர்ஜுன் டெண்டுல்கரின் பவுலிங் உலக அளவில் பேசப்பட்டு வருகிறது.
