Tamil Cinema News | சினிமா செய்திகள்
27 வருஷத்துக்கு பின் அர்ஜுன் நடித்த பிரமாண்ட படத்தின் இரண்டாம் பாகம்.. வெறித்தனமாக வைரலாகும் பதிவு
தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டிப் பறந்த தயாரிப்பாளராக இருந்தவர் கே.டி. குஞ்சுமோகன். இவருடைய படங்கள் அனைத்திலும் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.
காதல் தேசம், காதலன், ரட்சகன், ஜென்டில்மேன், சூரியன் போன்ற மெகா பட்ஜெட் கொண்ட சூப்பர் டூப்பர் படங்களை தயாரித்த பெருமைக்குரியவர்.
அதேபோல தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சரத்குமார், நாகார்ஜூன் போன்றவர்களை அறிமுகப்படுத்தியவரும் இவரே. பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் ஷங்கர், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் ஆகியோருக்கு வாய்ப்பு அளித்தவரும் இவரே.
குஞ்சு மோகன் தயாரிக்கிற படம் எப்போ வரும்னு திரையரங்கை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர் கூட்டமும் இருந்ததுண்டு.
தொடர்ந்து வெற்றியை கண்ட குஞ்சு மோகனுக்கு தளபதி விஜய் நடித்த நிலாவே வா, என்றென்றும் காதல் போன்ற படத்திற்கு அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
அதுக்கு அப்புறம் அவரோட மகனையே வச்சு ரெண்டு படத்தை எடுத்து அதுவும் ரிலீஸ் ஆகாததால், போட்ட காசு எல்லாம் யானை வாயில் போட்ட பொறியா போச்சு.
கிட்டத்தட்ட முப்பது வருஷமா ரிட்டயர்மென்ட்ல இருந்த குஞ்சு மோகன், தன்னோட தயாரிப்புல ஷங்கர் இயக்கி 1993ல் வெளியான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாவது பாகத்தை தயாரிக்க போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஜென்டில்மேன்2 படமானது தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளிலும் படமாக்கப் போவதாகவும், இது வரை யாரும் இப்படி ஒரு படத்தை பண்ணுனது இல்லன்னு வாயில கை வைக்கிற அளவுக்கு நவீன தொழில் நுட்பங்களை எல்லாம் யூஸ் பண்ணி பல மடங்கு பிரம்மாண்டத்தை காட்டப் போவதாகவும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார்.
