Tamil Cinema News | சினிமா செய்திகள்
அர்ஜுன் கொடுத்த வாக்குறுதி நெகிழ்ந்த விஜய் டிவி அரங்கம்!

இந்த காலத்தில் பல திறமைகள் இருந்தாலும் அந்த படைப்பாளிகளின் முகம் தெரிவதில்லை. அந்த படைப்பாளிகளை கண்டறிந்து அவர்களின் முகம் உலகிற்கு வெளிவர செய்வது சில தொலைகாட்சிகள் தான்.

arjun
சமீபகாலமாக திறமையுள்ள படைப்பாளிகளை கண்டு வருகிறது விஜய் டிவி அந்த வகையில் பிரபல பாடல் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜெயந்தி என்பவர் கலந்து கொண்டு பாடி வருகிறார். இவர் பல கஷ்டங்களுக்கு இடையில் பாடி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
அர்ஜுன், இவர் தயாரித்து வெளிவந்து வெற்றி நடைபோட்டு கொண்டு இருக்கும் படம் ‘சொல்லிவிடவா’. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்து இருந்தார் . அதில் உங்கள் குழந்தையில் படிப்பு சம்பந்தமாக எந்த உதவி வேண்டுமானாலும் சொல்லுங்கள் நான் செய்கிறேன் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.
இந்த வார்த்தையை கேட்டு ஜெயந்தி பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
