அர்ஜுன் ரெட்டி ரீமேக் படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்.!

விஜய் தேவர்கொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கு சினிமாவையே புரட்டிப்போட்ட படம் தான் அர்ஜுன் ரெட்டி. மருத்துவக் கல்லூரியில் சீனியர், ஜூனியர் இடையே நடக்கும் லவ் ஸ்டோரி.

arjun reddy

காதல், காமெடி, ரொமான்ஸ், பிரேக்-அப், என்று பல பரிமாணங்களை இந்தப்படத்தில் அழகாக சித்தரித்து இருந்தார் இயக்குனர் சந்தீப் வாங்க ரெட்டி. முதல் படத்திலேயே இந்திய சினிமாவையே தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்துவிட்டார் இயக்குனர்.

பிற மொழிகளில் இப்படத்தின் ரீ- மேக்கிற்கு பலத்த போட்டி நடைபெற்றுவருகிறது. தமிழ் பதிப்பில் நடிக்கப்போவது நம்ப சீயான் விக்ரம் மகன் துருவ். இயக்குனர் பாலா. படத்தின் பெயர் வர்மா. மேலும் இந்த படத்தில் யார் யார் நடிக்கபோகிரார்கள் என்று தெரியவில்லை,

இந்த நிலையில் அர்ஜுன் ரெட்டி ரீமேக் படத்திற்கு  வசனம் எழுதப்போவது ஜோக்கர் படத்தை இயக்கிய ராஜுமுருகன் தானாம்.

Comments

comments

More Cinema News: