Arjun-Reddy

விஜய் தேவர்கொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கு சினிமாவையே புரட்டிப்போட்ட படம் தான் அர்ஜுன் ரெட்டி. மருத்துவக் கல்லூரியில் சீனியர், ஜூனியர் இடையே நடக்கும் லவ் ஸ்டோரி.

காதல், காமெடி, ரொமான்ஸ், பிரேக்-அப், என்று பல பரிமாணங்களை இந்தப்படத்தில் அழகாக சித்தரித்து இருந்தார் இயக்குனர் சந்தீப். இப்படத்தில் நடிக்கப்போவது நம்ப சீயான் விக்ரம் மகன் துருவ், ஷரியா சர்மா  என்றும், படத்தை இயக்கப்போவது பாலா, தயாரிக்கப் போவது ஈ4என்டேர்டைன்மென்ட் என்பது நாம் அறிந்த செய்தியே.

இந்த மாதிரி ஒரு பவர்புள் கதாபாத்திரம் அறிமுக நடிகர் ஒருவரால் சமாளிக்க முடியுமா என்று கேள்விகள் ஒருபுறம் வந்த வண்ணம் உள்ள நிலையில், துருவ் தன்னை மறுபுறம் இந்த கதாபாத்திரத்திற்க்காக தயார் செய்து கொண்டு தான் இருக்கிறார்.

Arjun-Reddy

இந்நிலையில் இவர் அக்கா அக்ஷிதாவின் கல்யாணத்தில் புது கெட்அப்பில் இருந்த இவரை காமெராக்கள் கிளிக் செய்ய தவறவில்லை. லாங் ஹேர், முரட்டு தாடி என்று உள்ளார் துருவ்.

துருவ் விக்ரம்:

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்த காரணத்தினால் நடிப்பு, நடனம் என்று அணைத்து துறையிலும் ட்ரைனிங் பெற்று வந்த துருவ், தன முதல் படத்துக்காக பல ஸ்கிரிப்டுகள் கேட்ட துருவ்; எது என்று முடிவு பண்ணாமல் இருந்தாராம். இந்நிலையில் தான் அவர் அர்ஜுன் ரெட்டி படம் பார்த்துள்ளார். அவருக்கு மிகவும் பிடித்து போக, இதையே தன்  முதல் படமாக நடிக்க முடிவு எடுத்தாராம்.

vijay devarkonda

விஜய் தேவர்கொண்டாவுடன் ஒரு நாள்:

சீயான் விக்ரம் போன் செய்து விஜய் அவர்கள் தன்னுடனும், தன் மகனுடன் ஒரு நாள் மீட் செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார். விக்ரம் போன்ற லெஜென்ட் கூப்பிட்டதும் விஜய் தேவர்கொண்டா ஒரு நாள் முழுக்க விக்ரமின் குடும்பத்துடன் இருக்க சம்மதித்தாராம். இந்த சந்திப்பில் அர்ஜுன் ரெட்டி ரோல் குறித்து துருவ் மற்றும் விஜய் பல விஷயங்களை அலசினார்களாம். சில டிப்ஸ் உம் வழங்கினாராம் விஜய். இயக்குனர் பாலாவையும் இந்த சந்திப்பில் மீட் செய்துள்ளாராம் விஜய் தேவர்கொண்டா.

vijay devarkonda dhuruv

இயக்குனர் பாலா :

விக்ரமிற்கு சினிமா துறையில் நிரந்தர அங்கீகாரம் கிடைக்க காரணமாக இருந்தது இயக்குனர் பாலாவின் சேது திரைப்படம் தான். இவரின் சீயான் அடைமொழி கூட இப்படத்தில் இருந்து தான் விக்ரம் பெயருடன் ஒட்டிக்கொண்டது. எனவே தன் மகனின் முதல் படம் பாலா எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அவரிடம் கேட்டுக் கொண்டாராம்.

இயக்குனர் பாலா தான் எழுதும் படங்களை தான் இதுவரை இயக்கிவந்தார்.நாச்சியார் படம் தான் முதல் முறையாக, இவர் வேறு ஒருவரின் (வேல.ராமமூர்த்தி) கதையை இயக்குவது. தற்பொழுது விக்ரம் கேட்டுக் கொண்டதால் தான், மறுப்பு எதுவும் சொல்ல முடியாமல் இவர் ரீ- மேக் படம் எடுக்க ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

sethu

 

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்:

விக்ரமிற்கு சீயான் என்று பெயர் வைத்தது போல், துருவ்விற்கு என்ன அடைமொழி வைப்பார் என்று தெரிந்துகொள்ள இப்பவே ஆர்வமாக உள்ளது.