Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாலா படத்தின் காப்பிதான் அர்ஜுன் ரெட்டி.. பரபரப்பைக் கிளப்பிய பிரபலம்
சமீபத்தில் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆதித்ய வர்மா. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. துருவ் விக்ரமின் நடிப்பை பாராட்டிய நாளும் வசூல் ரீதியாக இந்த படம் ஒரு பெரிய அடி தான்.
தற்போது பாலாவின் சேது படத்தின் ரீமேக்தான் அர்ஜுன்ரெட்டி எனவும் பரபரப்பை கிளப்பியுள்ளார் ஒளிப்பதிவாளர் சுகுமார். அவர் கூறியதாவது, ஆதித்யா வர்மா திரைப்படத்தை விட பாலா இயக்கிய வர்மா திரைப்படம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெலுங்கு அர்ஜுன்ரெட்டி திரைப்படமே விக்ரம் நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளியான சேது படம் தான் எனவும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். ஏற்கனவே வர்மா பட விவகாரத்தில் விக்ரம் பாலா இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.
தற்போது எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல ஒளிப்பதிவாளர் கூறியது, விக்ரமுக்கு மேலும் டென்ஷனை ஏற்றி உள்ளது என்கிறது அவரது தரப்பு. தனித்துவமான இயக்குனராக கருதப்படும் பாலா, வர்மா படத்தை விக்ரம் வேண்டுகோள்படி ரீமேக் படத்தை இயக்க சம்மதித்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.
சரி! சீக்கிரம் நெட்ல ரிலீஸ் பண்ணுங்கப்பா.. அதையும் பாத்துடுவோம் என்கிறது ரசிகர் பட்டாளம்.
