fbpx
Connect with us

Cinemapettai

அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர்கொண்டாவின் நேரடி தமிழ் படம். இயக்குனர் இவரா?

News | செய்திகள்

அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர்கொண்டாவின் நேரடி தமிழ் படம். இயக்குனர் இவரா?

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும்   நடிக்கவுள்ளார்  விஜய் தேவர்கொண்டா. இப்படத்தினை  ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

ஆனந்த் ஷங்கர்

இவர்  பாலிவுட்டில் உதவி இயக்குனராக இருந்தார். அதன் பின் இவர் முருகதாஸிடம் 7 ஆம் அறிவு, துப்பாக்கி படங்களில் பணி புரிந்தார். விக்ரம் பிரபுவின்  ‘அரிமா நம்பி’ படம் வாயிலாக  இயக்குனராக அறிமுகமானவர் ஆனந்த் சங்கர். பின்னர் சீயான் விக்ரம், நயன்தாரா கூட்டணியில் இருமுகன் படத்தை இயக்கினார்.

இந்நிலையில்  ஆனந்த் சங்கர்  அடுத்த இயக்கும் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும், அதனை ஸ்டூடியோ கிரீன்  தயாரிக்க இருப்பதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது .  இப்படத்தின் கதாநாயகன் யார் என்று சஸ்பென்ஸ் வைத்தனர்.

இன்று  இந்த படத்தில் கதாநாயகனாக,  தெலுங்கில் வெளியாகி இந்திய சினிமாவையே கலக்கிய  ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஹீரோ  விஜய் தேவரகொண்ட நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்துள்ளது. அர்ஜுன் தேவரகொண்டா இப்படத்தின் மூலமாக  தமிழில் அறிமுகம் செய்கிறார் கே.ஈ.ஞானவேல் ராஜா.

‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்கு படத்தை தமிழில் விக்ரமின்  மகன் துருவ் நடிப்பில் பாலா ரீ-மேக் செய்ய உள்ள சூழலில், விஜய் நேரடி தமிழ் என்ட்ரி கொடுக்கிறார்.

ரொமான்டிக், ஆக்ஷன் படமாக இது இருக்கும் என்கிறார்கள். விரைவில் இப்படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் வெளிவரும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top