Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் விருதை ஏலத்துக்கு விடும் அர்ஜூன் ரெட்டி ஹீரோ… காரணம் தெரியுமா?

அர்ஜூன் ரெட்டி படம் மூலம் கவனம் ஈர்த்த விஜய் தேவரகொண்டா, தனக்குக் கிடைத்த முதல் விருதை ஒரு நல்ல காரியத்துக்காக ஏலம் விடுவதாக அறிவித்திருக்கிறார்.
காதல் கதையின் உண்மை வெளிச்சங்களை அப்பட்டமாக சொன்ன ஸ்பெஷல் படம். வருடத்திற்கு ஒரு முறை வெளிவரும் சில படங்களில் எல்லா மொழிகளிலும் வாவ் சொல்ல வைக்கும். முதலில், மலையாளத்தில் வெளியாகிய ப்ரேமம் படத்திற்கு தமிழ்நாட்டிலே தனி கிரேஸ் இருந்தது. அனுபமா முதல் மடோனா செபஸ்டியன் வரை புகழப்பட்டார்கள். அதிலும், கோயம்புத்தூரில் இருந்து களமிறக்கப்பட்ட சாய் பல்லவி மலர் டீச்சராக அறிமுகமாக அட நம்ம பொண்ணுடா என தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். இதில், கூட ஒரு சுயநலம் இருக்கிறதென வைத்துக் கொள்ளலாம்.
கடந்த வருடம் வெளியான அர்ஜூன் ரெட்டியும் இதே ஸ்டைலில் கொண்டாடப்பட்டது. தெலுங்கு திரைப்படம் என்றாலும் தமிழ் ரசிகர்களே அடித்து பிடித்து திரையரங்குகளை ஹவுஸ்புல்லாக மாற்றினர். காரணம், அலட்டல் இல்லாத லவ், அடி தடி நாயகன், அப்பாவி நாயகி என படம் முழுதும் தெலுங்கு சினிமாவில் லாஜிக்குகள் உடைக்கப்பட்டது. முரட்டுப் பையன் என்றாலும் காதல் கசிந்துருக இருந்த விஜய் தேவரகொண்டாவின் மீது லவ்வில் சுற்றுகிறது தமிழ் அம்மணிஸ்.
இந்த படம் தெலுங்கு சினிமாவின் வரையறைகளை உடைத்து எரிந்ததுடன், வசூலிலும் புதிய சாதனை படைத்தது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவை தங்களது நண்பனாகவே நினைத்துக் கொண்டாடினர். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பேர் விருது விஜய் தேவரகொண்டாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேட்டகிரியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இவரும் நாமிநேட் செய்யப்பட்டார். அர்ஜுன் ரெட்டி படத்தின் ஃபேம் இவருக்கு விருதைப் பெற்றுத் தந்தது. சமீபத்தில் நடைபெற்ற ஃபிலிம் பேர் விருது விழாவில் இவருக்கு விருது வழங்கப்பட்டது.
இந்தநிலையில், தனது விருதை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளதாக அவர் திடீரென அறிவித்துள்ளார். தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மக்கள் பணிகள் மூலம் ஈர்க்கப்பட்டதாகவும், விருதை ஏலத்தில் விடுவதன் மூலம் கிடைக்கும் தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டாவின் அறிவிப்பை வரவேற்றுள்ள தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ், இதுகுறித்த நடைமுறைகளை விரைவில் செய்வோம் என்று உறுதியளித்திருக்கிறார். நடிகர் ஒருவர் தனக்குக் கிடைத்த முதல் விருதை ஏலத்தில் விடுவது டோலிவுட்டில் அநேகமாக இதுவே முதல்முறையாகும்.
