Tamil Cinema News | சினிமா செய்திகள்
அர்ஜுன் ரெட்டி ரசிகர்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி…
வித்தியாசமான காதல் கதையாக வெளிவந்த அர்ஜுன் ரெட்டியின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சந்தீப் இயக்கிய படம் அர்ஜுன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஜோடியாக நடித்திருந்தனர். கடந்த வருடம் தெலுங்கு திரையுலகில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. வழக்கமான தேவதாஸ் – பார்வதி கதை என்றாலும் ஒரு வாழ்வில் இருக்கும் அடிப்படையான அனைத்துமே ஒரு படத்தில் காட்டி ரசிகர்களை கொள்ளை கொண்டார் இயக்குனர். முரட்டுத்தனம் தன் கூடவே பிறந்தது போல கதாபாத்திரத்தில் அசலாக ஒட்டி விட்டார் விஜய் தேவரகொண்டா. அறிமுக காட்சி முதல் கிளைமாக்ஸ் வரை குழந்தை தனம் மாறாமல் இருக்கிறார் ஷாலினி பாண்டே. படத்தில் அத்தனை அந்தரங்க காட்சிகள் அனைத்திலும் காதலை மட்டுமே நிரப்பு ரசிக்க வைத்தார் இயக்குனர் சந்தீப். தெலுங்கு சினிமாவில் இப்படி ஒரு படம் என்பது ரசிகர்களால் மட்டுமல்ல பிரபலங்களால் கூட நம்பமுடியாத ஒன்று தான்.
இந்நிலையில், அர்ஜுன் ரெட்டியின் இரண்டாம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முரட்டு தேவதாஸாக வலம் வந்த அர்ஜுனின் 40வது வயதில் நடக்கும் கதைகளத்தை கொண்டு இரண்டாம் உருவாகும் என படக்குழு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் மற்றும் தெலுங்கில் நோட்டா படத்தில் விஜய் தேவரகொண்டா பிஸியாக நடித்து வருகிறார். அப்படத்தை முடித்ததும் அர்ஜுன் ரெட்டி இரண்டாம் பாக படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சினிமாவிற்கே ஒரு மொழியில் வெற்றி பெற்ற படத்தை எல்லா மொழி ரசிகர்களுக்கும் எடுத்து செல்வது வழக்கமான ஒன்றாகி விட்டது. தெலுங்கில் மாஸ் ஹிட் கொடுத்த அர்ஜுன் ரெட்டியும் தற்போது அப்பட்டியலில் இணைந்து இருக்கிறது. தமிழில் இப்படம் வர்மா என்ற பெயரில் உருவாக இருக்கிறது. நாச்சியார் படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா இப்படத்தை இயக்குகிறார். சியான் விக்ரமின் மகன் துருவ் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அந்த குட்டி குழந்தை ஷாலினி கதாபாத்திரமும் புதுமுகமாக இருக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இதுவரை யார் அது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
பாலிவுட்டிலும் ஷாகித் கபூர் இயக்கத்தில் சந்தீப் ரெட்டியே இப்படத்தை அதிகாரப்பூர்வமாக செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
