விஜய் தேவர்கொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கு சினிமாவையே புரட்டிப்போட்ட படம் தான் அர்ஜுன் ரெட்டி. மருத்துவக் கல்லூரியில் சீனியர், ஜூனியர் இடையே நடக்கும் லவ் ஸ்டோரி.

Sandeep Vaanga Reddy – Vijay Devarkonda : ARJUN REDDY shooting spot

காதல், காமெடி, ரொமான்ஸ், பிரேக்-அப், என்று பல பரிமாணங்களை இந்தப்படத்தில் அழகாக சித்தரித்து இருந்தார் இயக்குனர் சந்தீப் வாங்க ரெட்டி. முதல் படத்திலேயே  இந்திய சினிமாவையே தன்னை நோக்கி  திரும்பி பார்க்க வைத்துவிட்டார் இயக்குனர்.

Arjun-Reddy

பிற மொழிகளில்  இப்படத்தின் ரீ- மேக்கிற்கு பலத்த போட்டி   நடைபெற்றுவருகிறது. தமிழ் பதிப்பில்  நடிக்கப்போவது நம்ப சீயான் விக்ரம் மகன் துருவ். இயக்குனர் பாலா. படத்தின் பெயர் வர்மா. இது நாம் அறிந்த சங்கதியே.

அதிகம் படித்தவை:  பள்ளிக் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான விஷயம் : லீவு அதிகரிக்குதாம்!

பாலிவுட்டில் அர்ஜுன் ரெட்டி

Sandeep_Reddy_Vanga

இப்படத்தை இயக்குனர் சந்தீப் அவர்களே ஹிந்தியில் இயக்குவார் என்ற தகவல்கள் வெளியாகின. முதலில் ரன்வீர் சிங்குடன் பேச்சு வார்த்தை நடந்தது. பின்னர் ஷாஹித் கபூர் தான் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்கப்போவது அர்ஜுன் கபூர் என்கிறார்கள். படத்தின் ஹிந்தி உரிமையை வாங்கியவர்கள் அர்ஜுன் கபூர் வைத்து இயக்குமாறு வலியுறுத்துகின்றனர் என்ற செய்தி பரவியுள்ளது.

Ranveer Singh – Arjun Kapoor – Shahid Kapoor

அர்ஜுன் கபூர் நடிகை ஸ்ரீ தேவியின் கணவரான போனி கபூரின் முதல் மனைவியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சந்தீப் வைத்துள்ள கோரிக்கை இது தான் ” ஒன்று ஷாஹித் கபூர் வைத்து இயக்குகிறேன் இல்லையென்றால் அர்ஜுன் கபூர் 20 கிலோ உடல் எடை குறைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நான் வெளியேறுகிறான்” என்று கூறியதாக கிசு கிசுக்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  விஷாலையே எதிர்க்கிறாயா? நீ இருக்க மாட்டாய் – சுரேஷ் காமாட்சிக்கு மிரட்டல்…
Boney & Arjun Kapoor

இந்நிலையில் இயக்குனர் தன் பேஸ் புக்கில் வதந்திகளை நம்ப வேண்டாம். என் அடுத்த படத்தின் அறிவிப்பை நேரம் வரும் பொழுது நான் சொல்கிறான் என்று ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

sandeep vanga reddy- Facebook

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

இயக்குனர் சந்தீப் வாங்க ரெட்டியின் மகன் பெயர் அர்ஜுன் ரெட்டி !