அஜித் நடித்த என்றும் மறக்க முடியாத ப்ளாக் பஸ்டர் படங்களில் ஒன்று மங்காத்தா. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். மேலும் அர்ஜூன் இப்படத்தில் அஜித்துக்கு நண்பராக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் ‘வீரம்’ சிவா இயக்கவிருக்கும் ‘தல 57’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க அர்ஜூனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் தற்போது தனது மகளை வைத்து ‘காதலின் பொன் வீதியில்’ எனும் ரொமாண்டிக் படத்தை இயக்கி வருகிறார். அதனால் அவர் ‘தல 57’ படத்தில் நடிக்கவந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார் என கூறப்படுகிறது.