தேசிய விருது விழாவில் கலந்து கொள்ள ஜான்வி மற்றும் குஷி கபூருடன், அர்ஜூன் டெல்லி செல்ல மறுத்து இருக்கிறார். ஆனால், தவறான எண்ணமெல்லாம் இல்லையாம்.

arjun
arjun

நடிகை ஸ்ரீதேவியின் மறைவு கபூர் குடும்பத்திற்கு பெரும் இடியாக அமைந்தது. துபாயில் திருமணத்திற்காக சென்றவர் உயிர் இல்லாத உடலாக தான் மும்பை திரும்பினார். இதில், ஸ்ரீதேவி கணவர் போனி கபூருக்கு மட்டுமல்லாமல் ஜான்வி மற்றும் குஷிக்கு துணையாக இருந்தது அர்ஜூன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என்பது எல்லாருக்குமே தெரிந்த சேதி தான். போனியின் முதல் மனைவியின் குழந்தைகளான இவர்கள் ஸ்ரீதேவி இருந்த இடத்தில் இருந்து தற்போது இருவரையும் பார்த்து கொள்கிறார்கள். ஸ்ரீதேவியுடன் சமூகமான உறவில் இல்லாத அர்ஜூன், தன் தங்கைகளை பார்த்து கொள்வதற்கு காரணமாக தன் தாய் மோனா இறந்த போது தான் பட்ட துன்பத்தை ஜான்வி மற்றும் குஷிக்கு ஏற்பட கூடாது என்பதில் குறியாக இருந்தாக நெருக்கமானவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

நடிகை ஸ்ரீதேவி பாலிவுட்டில் கடைசியாக நடித்த படம் மாம். இவர் கணவர் போனி கபூர் தயாரித்த இப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இதில், அம்மாவாக நடித்த ஸ்ரீதேவிக்கு பாராட்டுகள் குவிந்தது. தொடர்ந்து, கடந்த வருட சிறப்பான கலைஞர்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதில், நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்காக விருது கொடுக்கப்பட்டது. இதன் விருது விழா சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது. அதில், போனி, குஷி மற்றும் ஜான்வி கபூர் கலந்து கொண்டனர்.

ஆனால், அர்ஜூன் கபூர் டெல்லிக்கு வரவே இல்லை. அவரை போனி கூப்பிட்ட போது கூட மறுத்து விட்டாராம். ஸ்ரீதேவி மீதுள்ள கோபத்தால் எல்லாம் இல்லையாம். ஜான்வி மற்றும் குஷி தங்கள் அம்மாவின் மகத்தான தருணத்தை அனுபவித்து மகிழ வேண்டும் என்பதே அர்ஜூன் விரும்பினார் என அவரது தரப்பு நண்பர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதைப்போல, போனி கபூரும் இந்த பயணத்தை தவிர்க்கவே விரும்பினாராம். ஸ்ரீதேவி மறைந்து முழுதாக இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. இன்னும் துயரத்தில் இருந்து மீளாத போனி, ஸ்ரீதேவியின் பெயரை கேட்டாலே அழுதுவிடுகிறாராம். இதனால், அவர் பெயரை பெரும்பாலும் தவிர்த்து வந்திருக்கிறார். ஆனால், இந்த விருது ஸ்ரீதேவியின் திரை வாழ்வில் முக்கிய மைல்கல் என்பதாலே இந்த பயணத்திற்கு ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஜான்வியும், குஷியும் தந்தையை சமாதானப்படுத்தி டெல்லி அழைத்து சென்றதாக தெரிகிறது.