Connect with us
Cinemapettai

Cinemapettai

arjun-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அர்ஜுன் குடும்பத்தில் திடீரென ஏற்பட்ட சோகம்.. சுத்தி சுத்தி அடிக்கும் துயரம்

தமிழில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். ஒரு காலத்தில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்தவர் தற்போது வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அர்ஜுன் தம்பி சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் இறந்த செய்தி அனைவருக்கும் தெரிந்ததுதான். அவர் பிரபல நடிகை மேக்னா ராஜ் திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது மேக்னாராஜ் நான்கு மாத கர்ப்பமாக இருந்த வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பக்கபலமாக இருந்து வந்த அவரது தம்பி துருவ் சர்ஜாவுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது அர்ஜுனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருவ் சர்ஜாவுக்கு மட்டுமல்லாமல் அவரது மனைவிக்கும் கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்த செய்தி ஆக்ஷன் கிங் அர்ஜுனை மனமுடைந்து உட்கார வைத்துள்ளது. ஏற்கனவே ஒரு தம்பி இறந்துவிட்ட நிலையில் இன்னொரு தம்பிக்கும் உயிரை கொல்லும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட்டதால் சோகத்தில் இருக்கிறாராம்.

அதுவுமில்லாமல் பிரபல தமிழ் நடிகை மேக்னா ராஜ்க்கு அவரை விட்டால் ஆளில்லை என்பதுதான் தற்போது கவலையான விஷயம். கைக்குழந்தையுடன் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என கதறி கதறி அழுவதைப் பார்த்தால் கல் நெஞ்சுகாரர்கள் கூட கரைந்து விடுவார்கள்.

Continue Reading
To Top