ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

ரொமான்ஸில் புகுந்து விளையாடும் அர்ஜுன் தாஸ், அதிதி.. விஜய் பட டைட்டிலில் வெளியான டீசர்

Once More Teaser: பிரம்மாண்ட இயக்குனரின் மகள் என்ற அடையாளத்தோடு ஹீரோயின் ஆக நுழைந்தார் அதிதி சங்கர். முதல் படத்திலேயே கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்தார்.

அதை அடுத்து தற்போது அவர் நேசிப்பாயா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அர்ஜுன் தாஸ் உடன் அவர் இணைந்துள்ள படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது டீசர் ஆச்சரியத்தை உருவாக்கி இருக்கிறது. ஏனென்றால் படத்திற்கு விஜய் நடிப்பில் வெளிவந்த ஒரு படத்தின் டைட்டில் தான் வைக்கப்பட்டிருக்கிறது.

விஜய் பட டைட்டில் வெளியான டீசர்

அந்த வகையில் ஒன்ஸ்மோர் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படம் வரும் 2025 காதலர் தினத்தை முன்னிட்டு வெளிவர இருக்கிறது. விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் ஹெஷாம் அப்துல் வஹாப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஆரம்பத்திலேயே இது முழுக்க முழுக்க காதல் படம் என்பதை காட்டி இருக்கிறார்கள். அதை தொடர்ந்து இந்த ஜோடி ரொமான்ஸில் புகுந்து விளையாடி இருக்கின்றனர். அதனாலேயே நிச்சயம் இளைஞர்களை படம் கவரும் என தெரிகிறது.

அதிலும் இருவரின் ரொமான்டிக் முத்த காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இந்த டீசருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் இந்த ஜோடியின் காதலை ரசிக்கவும் ரசிகர்கள் தயாராகி விட்டனர்.

ரொமான்ஸ் அலப்பறை பண்ணும் அர்ஜுன் தாஸ்

- Advertisement -spot_img

Trending News