India | இந்தியா
சரித்திர கதையில் மிரட்ட போகும் அர்ஜுன்! ஹீரோ பெயரை கேட்டா சும்மா அதிருதுல!
கேரளாவில் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கடற்படை தளபதிகள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்களில் நான்காவது குஞ்சாலி மரைக்கார் வீரதீரம் நிறைந்தவராக கேரள மக்களால் போற்றப் படுகிறார்.
அவரது வாழ்க்கை ‘அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற பெயரில் சினிமாவாக தயாராகிறது. இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். இதுவரை அவர் ஏற்றிராத இந்த கதாபாத்திரம் அவருக்கு பெரும் புகழை தரும் என்று சொல்கிறார்கள்.
இப்படம் 100 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ளது. பிரியதர்ஷன் இயக்கி வருகிறார். மோகன்லாலுடன் கீர்த்தி சுரேஷ் அர்ஜுன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஏற்கனவே மோகன்லால் கீர்த்தி சுரேஷ் தோற்றங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று விட்டது.
இப்போது அரபிக் கடலிண்டே சிம்ஹம் படத்தில் வரும் அர்ஜுன் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளார்கள் இந்த தோற்றம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படத்தை மார்ச் மாதம் 26ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி உள்பட 5 மொழிகளில் திரைக்கு கொண்டு வரவும் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
சமீப காலமாக அர்ஜுன் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் அதிகமாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் வில்லன் வேடம் ஏற்று இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
