தனக்கும் பயிற்சியாளர் கும்ப்ளேவிற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என்று கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கும்ப்ளேவின் பதவி காலம் சாம்பியன்ஸ் டிராபியுடன் நிறைவடைய உள்ளது. பயிற்சியாளராக நீடிக்க கும்ப்ளே விருப்பம் தெரிவித்திருந்தாலும் இந்திய கேப்டன் கோஹ்லி கும்ப்ளே இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதாக தினந்தோறும் ஒவ்வொரு தகவல்கள் வெளியாகி அது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.

அதிகம் படித்தவை:  சைபர் க்ரைம்க்கே தண்ணி காட்டிய தமிழ் ராக்கர்ஸ்.! பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா.? இனி ஒன்னும் பண்ண முடியாது

இந்நிலையில் பாகிஸ்தான் அணியுடன் நாளை நடைபெற இருக்கும் போட்டி குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து பேசிய விராத் கோஹ்லி “ அணியில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை. அனில் கும்ப்ளேவுடன் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியாகும் அனைத்து தகவல்களும் வெறும் வதந்தியே, அணியோடு எந்த விதமான தொடர்பும் இல்லாதவர்களே இது மாதிரியான பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.