ரஜினிக்கு இவ்வளவு படங்கள் தோல்வியா.? அப்படி இருந்தும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய தலைவர்

Rajini in Failure Movies: 80களில் இருந்து இப்பொழுது வரை இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து தன்னுடைய 73 ஆவது வயதிலும் ஹீரோவாக நடித்து வரும் ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார். இப்படிப்பட்ட இவர் கிட்டத்தட்ட 170 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் பல பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து இருந்தாலும் இடைப்பட்ட நேரத்தில் தோல்வி படங்களையும் தழுவி இருக்கிறார். அது என்னென்ன படங்கள் என்று தற்போது பார்க்கலாம்.

அந்த வகையில் 1977 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த ரகுபதி ராகவ ராஜாராம், ஆறு புஷ்பங்கள், ஆடு புலி ஆட்டம் ஆகிய மூன்று படங்கள் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அடுத்ததாக 1978 இல் வணக்கத்திற்குரிய காதலியே, மாங்குடி மைனர், சதுரங்கம், இறைவன் கொடுத்த வரம், என் கேள்விக்கு என்ன பதில், போன்ற ஐந்து படங்களும் பெய்லியர் படமாக முத்திரை குத்தப்பட்டது.

அடுத்ததாக 1980 ஆம் ஆண்டு வெளிவந்த நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி போன்ற இரண்டு படங்களும் பிளாப் ஆனது. இதனை அடுத்து 1981 ஆம் ஆண்டு கர்ஜனை, 1985 இல் உன் கண்ணில் நீர் வழிந்தால், 1986 இல் மாவீரன், நான் அடிமை இல்லை, மற்றும் 1988ல் கொடி பறக்குது ஆகிய திரைப்படங்களும் தோல்வி படங்களாக ரஜினியை சறுக்கி விட்டது.

Also read: வியாபாரமாகாமல் கிடப்பில் கிடக்கும் ரஜினி படம்.. பொங்கல் ரிலீஸ் இல் இருந்து பின் வாங்கிய லால் சலாம்

அடுத்ததாக 1990 இல் ரஜினியின் கேரியர் கொஞ்சம் கொஞ்சமாக உச்சத்தை தொட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனால் இவருடைய தோல்வி படங்களும் கம்மியாகிவிட்டது. இருந்தாலும் அதிசய பிறவி, நாட்டுக்கு ஒரு நல்லவன், ரஜினி தயாரிப்பில் வெளியான வள்ளி படங்களும் தோல்வி பெற்றது. இதனை அடுத்து தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த இவர் 2000 ஆண்டு முதல் 2010 வரை சந்திரமுகி, சிவாஜி தி பாஸ், எந்திரன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக மாறி வசூல் அளவில் சாதனை படைத்த ஹீரோவாக வெற்றி பெற்றுவிட்டார்.

இதற்கிடையில் பாபா மற்றும் கெஸ்ட் ரோலில் நடித்த குசேலன் படமும் தோல்வியை தழுவியது. அடுத்ததாக கோச்சடையான் மற்றும் லிங்கா படங்களும் வந்த சுவடு தெரியாமல் மொக்கை படமாக ரசிகர்கள் மத்தியில் முத்திரை குத்தப்பட்டு விட்டது. இன்னும் சொல்ல போனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அத்துடன் தர்பார் மற்றும் அண்ணாத்தை படமும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்திருக்கிறது.

இப்படி கிட்டத்தட்ட 20 படங்கள் ரஜினிக்கு தோல்வி படமாக அமைந்திருக்கிறது. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது வரை ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். முக்கியமாக இந்த ஆண்டு வெளிவந்த ஜெயிலர் படம் வசூல் அளவில் 600 கோடிக்கும் மேல் சாதனை புரிந்து வசூல் மன்னன் என்கிற பட்டத்தையும் வென்று விட்டார்.

Also read: இந்திய சினிமாவுக்கே டஃப் கொடுக்க வரும் பாட்ஷா 2.. பாக்ஸ் ஆபிஸ் ராஜாக்களின் வைரல் போஸ்டர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்