
Moondru Mudichu Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியலில், சூர்யாவை பொருத்தவரை நிதானம் இல்லாமல் நந்தினி கழுத்தில் தாலி கட்டி இருந்தாலும் நந்தினியை விட்டுக் கொடுக்காமல் எந்தவித கஷ்டமும் வரவிடாமல் பார்த்துக் கொள்கிறார். ஆனாலும் மதுவுக்கு அடிமையாகவும், அம்மாவை பழி வாங்க வேண்டும் என்பதற்காக செய்யும் எல்லா விஷயத்திலும் நந்தினி சுந்தரவல்லி இடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.
இதனால் நந்தினிக்கு கல்யாண வாழ்க்கை பிடிக்காமல் போய்விட்டது அத்துடன் சூர்யாவுக்கும் தன் மீது பாசம் எதுவும் இல்லை என்று உணர்ந்த நந்தினி இந்த ஊரை விட்டு போக வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார். அதன்படி மாமனாரிடம் உதவி கேட்ட நிலையில் மாமனார் நீ என்னுடைய மகனை நல்வழிப்படுத்தி கொண்டு வந்து கொடு அதன் பிறகு நான் யோசிக்கிறேன் என்று ஒரு வேண்டுகோள் வைத்து விட்டார்.
அதனால் நந்தினி, சூர்யாவை குடிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்று எல்லா ஏற்பாடுகளையும் பக்காவாக பண்ணி சூர்யாவை மாற்றி வருகிறார். இதனால் குடிப்பழக்கத்தையே வெறுக்கும் சூரியா நிரந்தரமாக அதை விட்டுவிட்டு பொறுப்பான கணவராகவும் நந்தினி மீது உண்மையான அன்பையும் அக்கறையும் காட்டும் விதமாக மாறிவிடுவார்.
ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் அர்ச்சனா, நந்தினி மற்றும் சூர்யாவுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தி சூரியாவிடம் இருந்து நந்தினியை பிரிக்க வேண்டும் என்பதற்கு ஏற்ற திட்டத்தை போட்டு விட்டார். அதற்கு அவருடைய ஒரு ஆளை சுந்தரவல்லி வீட்டிற்குள் அனுப்பி வைத்து விட்டார். அந்த வகையில் நந்தினி மற்றும் சூர்யாவுக்கு இடையில் என்னென்ன விஷயங்கள் நடக்கிறது எப்படி இருக்கிறாங்க என்பதை தெரிந்துகொள்ள ரேணுகா வேவு பார்க்கிறார்.
வேவு பார்க்க வந்த ரேணுகா, சூர்யாவின் ரூமே வீடியோ காலில் அர்ச்சனாவுக்கு காட்டி வருகிறார். அந்த வீடியோவில் அர்ச்சனா நந்தினி தனியாக தூங்கும் பாயும் தளவானியையும் பார்த்துவிட்டு இவர்கள் இரண்டு பேரும் இன்னும் கணவன் மனைவியாக வாழவில்லை என்று தெரிந்து கொண்டார். இந்த ஒரு விஷயமே போதும் அவர்கள் இருவருக்கிடையே விரிசலை ஏற்படுத்துவதற்கு எனக்கு எளிதாக அமைந்துவிடும் என்று முடிவு பண்ணி அதற்கு ஏற்ற பிளான் பண்ணப் போகிறார்.
ஏற்கனவே எக்கச்சக்கமான பிரச்சனைகளை சந்தித்து வரும் நந்தினி வீட்டுக்குள் கொடைச்சல் கொடுக்கும் சுந்தரவள்ளியை சமாளிக்க முடியாமல் திணறுகிறார். இதுல வேற மறைமுகமாக இருந்து தாக்கும் அர்ச்சனாவின் செய்கைக்கு நந்தினி எப்படி பதிலடி கொடுக்கப் போகிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் என்ன ஆனாலும் சூர்யா நந்தினியை விட்டுக் கொடுக்க மாட்டார். கூடிய சீக்கிரத்திலேயே சூர்யா மற்றும் நந்தினி மனம் ஒத்தும் தம்பதிகளாக மாறிவிடுவார்கள்.