Connect with us
Cinemapettai

Cinemapettai

archana

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உடையை விலக்கி காட்டச் சொன்ன முன்னணி இயக்குனர்.. போட்டுக் கொடுத்த பிரபல நடிகை அர்ச்சனா

வாலு போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் அர்ச்சனா. சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் கவர்ந்து வருகிறார்.

பட வாய்ப்புகளுக்காக முன்னணி நடிகைகள் மட்டுமல்ல சின்ன சின்ன நடிகைகளும் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர் என சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அப்படி ஒரு விஷயம் தனக்கே நடந்துள்ளதாகவும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஒரு முன்னணி இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். அந்தப் படத்தில் அவருக்கு நர்ஸ் வேடமாம். படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென அனைவருக்கும் ப்ரேக் கொடுத்துவிட்டு இயக்குனர் அர்ச்சனாவை மட்டும் இருக்கச் சொல்லியுள்ளார்.

அப்போது அவரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே திடீரென உடையை விலக்கிக்காட்டச் சொல்லியுள்ளார். கேட்டதற்கு, நர்ஸ் உடை உங்களுக்கு சரியாக இருக்குமா என்பதை பார்க்க தான் அப்படி காட்ட சொன்னேன் என கூறினாராம். அர்ச்சனாவும் ஒன்றும் புரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக உடையை மேலே ஏற்றியுள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் அந்த இயக்குனரின் நடவடிக்கைகளில் மாற்றமானதை கவனித்தாராம். உடையை மேலே உயர்த்த சொல்லும்போதே அவர் தன்னிடம் தப்பாக எதையோ எதிர்பார்க்கிறார் என்று கூறி உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டாராம்.

இயக்குனரின் பெயரை சொல்லவில்லை என்றாலும் சமீபத்தில் தான் நர்ஸ் வேடத்தில் நடித்த படத்தை இயக்கிய முன்னணி இயக்குநர் ஒருவர் தான் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் அர்ச்சனா.

archana-vaalu-movie-fame-cinemapettai

archana-vaalu-movie-fame-cinemapettai

Continue Reading
To Top