Tamil Cinema News | சினிமா செய்திகள்
சுஷாந்த் சிங் தான் ராயப்பன் கேரக்டருக்கு அடிப்படையாமே.. தானே கண்டுபிடிச்ச மாதிரி அண்டப்புளுகு விட்ட அட்லீ
AGS நிறுவனம் தயாரிப்பில் கடந்த தீபாவளி வெளியாகி வைரல் ஹிட் அடித்த படம் பிகில். தளபதி விஜய் பிளேயர் \ கோச் என பிகில், மைக்கேலாக ரோலில் நடித்திருப்பார். அடுத்ததாக ராயப்பன் என்ற நார்த் மெட்ராஸ் தாதாவாக வயதான கெட் – அப்பில் அசத்தி இருப்பார்.
படத்தில் ராயப்பன் கதாபாத்திரம் மற்றும் விஜய்யின் லுக், ஸ்டைலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்த ராயப்பன் ரோலில் சீனியர் நடிகர் யாரையாவது நடிக்க வைக்க தான் படக்குழு முதலில் முடிவு செய்தனராம்.
எனினும் மும்பையை சேர்ந்த ப்ரீத்தி ஸ்ரீ என்ற காஸ்மெடாலஜிஸ்ட் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்களிடம் சுஷாந்த் சிங் நடிக்கும் சிச்சோரி படம் பற்றி சொல்லியுள்ளார்.
அப்படத்தில் அவர் அப்பா- மகன் வேடத்தில் நடிக்கிறார், அந்த இரு வேடமும் அழகாக பொருந்தியுள்ளது என போட்டோவையும் காமித்துள்ளார்.

chhichhore-sushant
அதனை பார்த்த பின்பு இயக்குனரிடம் தயாரிப்பாளர் தரப்பு பேச, பின்னர் படக்குழு முடிவு செய்து தான் தளபதி விஜய் அவர்களையே ராயப்பனாக மாற்றியுள்ளனர்.
இந்த தகவலை அர்ச்சனா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இது பற்றி அட்லீ ஏதும் சொல்லுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.
