Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் டீஸர் எப்பொழுது – வைரலாகுது தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசும் வீடியோ
விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட படமே பிகில். படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போகிறது. இந்த பட பூஜை சமயத்தில் தொடங்கி இசை வெளியீடு வரை AGS தயாரிப்பு நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி சந்தித்த சாவல்கள் தான் அதிகம் என்றால் கூட அது மிகையாகாது. ரசிகர்கள் தொடங்கி சின்னத்திரை, சினிமா பிரபலங்கள் கூட இவரிடம் பட அப்டேட் கேட்ட வண்ணமே இருந்தனர். அதுவும் ட்விட்டரில் எத்தனை ஹாஸ் டாக்குகள், ட்ரோல், மீம்ஸ் என கணக்கே கிடையாது.
இந்நிலையில் பிரபல பத்திரிகைக்கு அர்ச்சனா இன்று பேட்டி கொடுத்தார். அதில் இந்த வரம் வெளியாவது கடினம், எனினும் அக்டோபர் 7ம் தேதி டீசர் எப்போது வெளியிடப்படும் என்ற தகவல் கட்டாயம் வெளியாகும் என கூறியுள்ளார்.
We are working to release #Bigil teaser as soon as possible, this week it's not possible, it should be ready by next week! Hopefully by Monday we will announce – @archanakalpathi @Atlee_dir @Lyricist_Vivek #BigilTeaserUpdate #bigiltelugu pic.twitter.com/XdyY85NOoE
— vijay venkat (@vijayvenkat333) October 5, 2019
