ஐபிஎஸ் மூளைக்கு வேலை கொடுத்த அர்ச்சனா.. மாமியார் கையில் வசமாக சிக்கிய மருமகள்

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான ராஜா ராணி2 சீரியலில் கதாநாயகியை விட வில்லி தான் நன்றாக நடிக்கிறார் என்ற பெயரை வாங்கிய அர்ச்சனா, இந்த சீரியலில் தன்னுடைய வில்லத்தனத்தை தரமாக காட்டிக் கொண்டிருக்கிறார். இதற்காக எந்த எல்லைக்கும் வேணாலும் செல்லும் அர்ச்சனா, மாமியார் சிவகாமிக்கு ஆண் வாரிசு பெற்றுக்கொடுப்பதற்காக போலி சாமியாரை நாடியுள்ளார்.

அந்தப் போலி சாமியார் அர்ச்சனாவை பகடைக்காயாக பயன்படுத்தி ஆயிரக்கணக்கில் பணத்தை கரக்கிறார். இதற்காக அர்ச்சனா, சரவணன் அம்பாடுபட்டு சிங்கப்பூர் வரை சென்று சமையல் போட்டியில் வெற்றி பெற்றதற்காக கிடைத்த பரிசு தொகை ரூபாய் 5 லட்சம் பணம் வங்கியில் இருப்பதால், சரவணனின் ஏடிஎம் கார்டை திருடி அந்தப் பணத்தை சாமியாரிடம் அர்ச்சனா கொடுக்கிறார்.

சரவணனின் வங்கி கணக்கில் ஒவ்வொரு முறையும் அர்ச்சனா பணத்தை எடுக்கும்போது சரவணனின் செல்போனுக்கு மெசேஜ் வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் சந்தியாவிடம் இதை சொல்ல, சந்தியா தனது ஐபிஎஸ் மூளையை பயன்படுத்தி வங்கி மேலாளரிடம் புகார் அளிக்கிறார்.

அர்ச்சனா எந்த ஏடிஎம்-ல் இருந்து பணத்தை எடுத்தாரோ அந்த ஏடிஎம்-ல் வைக்கப்பட்ட கேமராவை பரிசோதித்து யார் பணத்தை எடுத்தார் என்பதைக் கண்டுபிடித்து, அதை ஆதாரத்துடன் வங்கி மேலாளர் கொண்டு வந்தார். இதனால்  அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அர்ச்சனாவை கேவலமாக பார்க்கின்றனர்.

இருப்பினும் அர்ச்சனா இதை தன்னுடைய குழந்தைக்காக தான் செய்தேன், இந்த குடும்ப வாரிசுக்காக தான் செய்தேன் என கொஞ்சம் கூட செய்தது தவறு என்பதை புரிந்துகொள்ளாமல் வாதிடுவது சீரியல் ரசிகர்களை வெறுப்பேற்றியது. குழந்தைக்காக இப்படிப்பட்ட கேவலமான வேலையை செய்த அர்ச்சனாவை கணவர் செந்தில் மற்றும் மாமியார் சிவகாமி இருவரும் சரமாரியாக திட்டுகின்றனர்.  கர்ப்பமாக இருக்கும் அர்ச்சனாவை இதற்கு மேல் தண்டிக்கக் கூடாது என அந்தப் பணத்தை பற்றி எதுவும் பேசாமல் விட்டுவிடுகின்றனர்.

மேலும் சந்தியாவும் வங்கி மேலாளரிடம் அளித்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதன்பிறகு  ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் சந்தியா தான் சிவகாமிக்கு ஆண்வாரிசு பெற்றுக் கொடுப்பார். தற்போது கர்ப்பமாக இருக்கும் அர்ச்சனாவிற்கு பெண் குழந்தை தான் பிறக்க போகிறது. இந்த சீரியல் ஏற்கனவே ஹிந்தியில் ஒளிபரப்பானது என்பதால் கதை அனைவருக்கும் தெரிந்ததுதான்.