புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பிக் பாஸ் வீட்டில் கோமாளியாக மாறிய அருணுக்கு அர்ச்சனா அடித்த விபூதி.. காதலுக்கு நாமத்தை போட்ட காதலி

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் வீட்டில் நேற்று பொம்மை டாஸ்க் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மஞ்சரிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் விதமாக ஜாக்லின் காலை நான்கு மணி வரை விளையாடி ஒரு திறமையான போட்டியாளர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அடுத்தபடியாக அன்சிதாவும் தீபக்காக விளையாடி இருக்கிறார். அந்த வகையில் டால் ஹவுஸில் இருக்கும் இடத்திலிருந்து பொம்மையை வைக்கும் போது ஏகப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

இதில் ஜாக்லின் மற்றும் விஷால் முட்டிக் கொள்ளும் அளவிற்கு வாக்குவாதம் முத்தி விட்டது. தர்ஷிகாவிற்காக விஷால், ஜாக்குலிடம் சண்டை போடும் விதம் பார்க்க கடுப்பாக இருக்கிறது. அந்த வகையில் இவர்கள் இருவருக்கு இடையே சண்டை வந்ததால் ரயான் ஜாக்லினை சமாதானப்படுத்தி வருகிறார். இப்படி பரபரப்பாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் அருண் பண்ற ஒவ்வொரு விஷயங்களும் பார்ப்பவர்களுக்கு கோமாளியாக இருக்கும் அளவிற்கு வெளியே அவரை வச்சு செய்கிறார்கள். இதனை பார்த்து கடுப்பான அர்ச்சனா, எல்லாத்துக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக அருண் விளையாடுவது அவனுக்காக விளையாடுகிறான். இதில் என்னை யாரும் சேர்த்து வைத்து பேச வேண்டாம்.

என்னுடைய பாதை வேறு அவனுடைய பாதை வேறு, அவன் அவனுக்கான விளையாட்டு விளையாடி வருகிறான். அந்த வகையில் ஒரு நண்பராக நான் அருணுக்கு சப்போர்ட் செய்வது வருவேன். ஆனால் அதற்காக என்னுடைய இமேஜை யாரும் காலி பண்ணும் விதமாக என்னை கோர்த்து விட்டு பேச வேண்டாம் என்று பதிவிட்டு இருக்கிறார்.

இதை பார்க்கும் பொழுது அருணுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்னை விட்டு விடுங்கள் என்று சொல்வதற்கு ஏற்ப காதலுக்கு நாமத்தை போடுவது போல் அர்ச்சனாவின் பதில் இருக்கிறது. தன்னுடைய இமேஜை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இத்தனை வருஷமாக நெருங்கிய நண்பராகவும் லவ்வராகவும் இருந்த அருணை விட்டு விலகுவது அருணுக்கு விபூதி அடித்தது போல் ஆகிவிடும்.

அவ்ளோதானா உங்க காதல் என்பதற்கு ஏற்ப அருணின் விளையாட்டு மக்களிடம் பல விமர்சனங்களை பெற்று வருவதால் அர்ச்சனா அதிலிருந்து தூரமாக விலகும் விதமாக பெரிய நாமத்தை போட்டு விட்டார். பாவம் இது தெரியாத அருண், நமக்காக நம்ம காதலி அர்ச்சனா வெளியே காத்துக் கொண்டிருப்பார் என்ற ஆசையில் உள்ளே விளையாடிக் கொண்டு வருகிறார். வெளியே வரும்பொழுது தான் அர்ச்சனாவின் உண்மையான முகம் தெரியப்போகிறது.

- Advertisement -

Trending News