Tamil Cinema News | சினிமா செய்திகள்
தின்ற சோத்துக்கு கணக்கு பாக்குறது ரொம்ப கேவலமா இருக்கு.! பிக்பாஸ் நிகழ்ச்சியே கொச்சைப்படுத்திய பிரபலம்
தற்போது விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 4.
இந்த சீசன் நடந்து முடிந்த மற்ற 3 சீசன்களை காட்டிலும் களை கட்டும் அளவிற்கு விஜய் டிவி நிர்வாகம் தரமான கண்டஸ்டன்ட்ஸ்களை களமிறக்கியுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சென்ற வாரம் ஒயில்கார்டு கன்டஸ்டன்ட்ஸ்சாக தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். எனவே அவர் வீட்டில் நுழைந்த முதல் நாளில் இருந்து பல திருப்பங்கள் நிகழ்ந்தது.
அதற்கேற்றாற்போல் தற்பொழுதும் பிக்பாஸ் வீட்டில் அத்தியவசிய உணவுப் பொருள், கேஸ் மற்றும் தண்ணீர் போன்றவைகளும் அளவாக மட்டுமே தரப்படும் என்று பிக் பாஸ் அறிவித்துள்ளார்.
இதனால் கொந்தளித்த அர்ச்சனா, “தின்ற சோத்துக்கு கணக்கு பாக்குறது ரொம்ப கேவலமா இருக்கு என்னதான் காசு கொடுத்தாங்கன்னு நாமெல்லாம் நடிக்க வந்தாலும் சாப்பிடுறதுக்கு கணக்கு பாக்குறது கொஞ்சம் கூட நியாயம் இல்லை” என்று பிக்பாஸ் நிகழ்ச்சியே கொச்சைப்படுத்தியுள்ளார்.
தற்போது அர்ச்சனாவின் இந்த ரியாக்ஷனை பார்த்த ரசிகர்கள், ‘கமல் கண்டிப்பா இந்த வாரம் உன்ன வச்சு செய்யப் போகிறாரு’ என்று கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெறிக்க விடுகின்றனர்.

big-boss-1
