கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். அவர்கள் காட்டும் பந்தவை பங்கமாக்கி மீம்ஸ்களாக போட்டு கலாய்த்து வருகின்றனர்.

அந்த வகையில் முதலில் சிக்கியது என்னமோ நம்ம தொகுப்பாளர் அர்ச்சனா தான். பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும்வரை அர்ச்சனா என்றால் சிறந்த நகைச்சுவை தொகுப்பாளினி என்ற பெயர் மட்டும் தான் இருந்தது.

ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அவரது உண்மை கேரக்டரை வெளியில் கொண்டு வந்து பங்கம் செய்து விட்டனர். தற்போது அவர் எந்த வீடியோ வெளியிட்டாலும் அதற்கு ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் பாத்ரூம் வீடியோவெல்லாம் வேற லெவலில் கலாய்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தானாக வந்து சிக்கிய ஆடுகள் தான் குட்டி வடிவேலு மற்றும் சோபி குட்டி. காதல் என்ற பெயரில் இந்த இரண்டு குழந்தைகளும் செய்த அட்டகாசம் தான் இணையத்தை கலக்கி வருகின்றன. ஓவராக சீன் போட்ட இவர்களை மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் போட்டே பிரித்து வைத்து விட்டனர்.


தற்போது அந்த வீடியோவில் பங்கு பெற்ற பெண் குழந்தை சோபியை குழந்தைகளை காப்பகத்திற்கு அனுப்பி சிகிச்சை கொடுத்து வருகிறார்களாம். அந்த அளவுக்கு அவர்களை நோகடித்து விட்டார்கள் போல.

இவர்கள் மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சிலவற்றின் தொகுப்பு இதில் கொடுக்கப்பட்டுள்ளது. யாம் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டுமல்லவா.
