fbpx
Connect with us

பிக் பாஸ் அர்னால்டை பாசத்துல மடக்குன அர்ச்சனா.. வாயடைத்துப் போன ரசிகர்கள்!

archana-big-boss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் அர்னால்டை பாசத்துல மடக்குன அர்ச்சனா.. வாயடைத்துப் போன ரசிகர்கள்!

தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் விஜய் டிவியின் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் தினசரி தாறுமாறான புது திருப்பங்கள் நடப்பது வழக்கமாய் உள்ளது.

அந்தவகையில் நேற்று எலியும் பூனையுமாய், சண்டை போட்டுக் கொண்டிருந்த பாலாவும் அர்ச்சனாவும், அம்மாவும் பிள்ளையுமாக மாறியது பிக்பாஸ் ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளது.

அதாவது நேற்று முன்தினம் விளையாட்டாக பாலாஜி கூறிய விஷயத்தை அர்ச்சனா, தாம் தூம் டமால் என்று ஆக்கி வீட்டிலேயே பெரிய பிரச்சினையாக மாற்றினார். இதனால் மனமுடைந்த பாலாஜி கார்டன் ஏரியாவில் அழுதது போல் புரோமோவிலும் காட்டப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு பாலாஜி, மொட்ட மற்றும் சம்யுக்தாவின் அறிவுரைப்படி அர்ச்சனாவிடம் பேச சென்றார். மேலும் பாலா அர்ச்சனாவிடம் போய், ‘நான் தூக்க கலக்கத்தில் இருந்தனால அப்படி பேசிட்டேன். சாரி’ என்று மன்னிப்பு கேட்டார்.

அதைத்தொடர்ந்து  பேசிய அர்ச்சனா, ‘சம்யுக்தா எப்படி ஆஜித்த குழந்தை மாதிரி பார்க்கிறார்களோ அந்த மாதிரி நான் இந்த வீட்ல உன்னை குழந்தை மாதிரி பார்க்கிறேன். நான் மிஸ் பண்ற ஒரு குழந்தையை பாலா மூலமா பார்க்கணும்னு நினைச்சேன். ஆனா அவன் இல்லன்னு சொல்லிட்டான்’ என்று கூறி அழத் தொடங்கினார்.

இதையடுத்து பாலா அர்ச்சனாவை கட்டித்தழுவி, ‘எங்க அம்மாவும் அப்பாவும் குடிச்சிட்டு என்ன சரியா வளக்கல. எனக்கு யாரும் இந்த மாதிரி பாசத்தை கொடுத்ததில்ல’ என்று கூறி அழத்தொடங்கினார். இவ்வாறு கடைசியில் இருவரின் சண்டையும் சமரசமாக முடிந்தது.

மேலும் ‘நேத்து நைட்டு ஆய் பூய்ன்னு கத்தின அர்ச்சனா, திடீரென பாலாவை பையன்னு சொன்னத பார்த்த ரசிகர்கள் பலர் இதுவும் அர்ச்சனாவின் மாஸ்டர் பிளான இருக்குமோ?’ என்ற சந்தேகத்தில் குழம்பி நிற்கின்றனர்.

Continue Reading
To Top