Connect with us
Cinemapettai

Cinemapettai

சொந்த செலவில் ஏழை சிறுமிகளுக்கு வீடு கட்டிக்கொடுத்த நடிகை

manjuwarrier

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சொந்த செலவில் ஏழை சிறுமிகளுக்கு வீடு கட்டிக்கொடுத்த நடிகை

சொந்த செலவில் ஏழை சிறுமிகளின் படிப்புக்காக வீடு கட்டிக்கொடுத்துள்ளார் மலையாள நடிகை மஞ்சு வாரியர்.

கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபேடு பகுதியில் அர்ச்சா மற்றும் ஆதிரா என்ற குழந்தைகள் படித்து வந்துள்ளனர். மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய ரெயில் பெட்டிகளில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர்.

தினமும் ரெயில் பெட்டியில் இருந்தபடியே பள்ளிக்கு போவதும், பள்ளி முடிந்ததும் மீண்டும் ரெயில் பெட்டிக்கு வருவதுமாவே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த விவரம் மஞ்சு வாரியருக்கு எப்படியோ தெரியவந்துள்ளது. தங்குவதற்கு வீடு இல்லாத போதும், வறுமையில் வாடினாலும் பள்ளிக்கு சென்று படிக்கும் சிறுமிகளின் ஆர்வத்திற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று மஞ்சு வாரியர் நினைத்துள்ளார்.

இதற்காக தனது சொந்த செலவில் 5 செண்ட்டில் நிலம் வாங்கி அதில் வீடு கட்டித் தந்துள்ளார். அதோடு தன்னுடைய அனைத்து நிகழ்ச்சிகளையும் தள்ளி வைத்து விட்டு, சிறுமிகளுக்கு புதிதாக கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களையும், அவர்களது பெற்றோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மஞ்சு வாரியரின் இந்த செயல் கேரள திரையுலகை பெருமைப்பட வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top