வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

வெளியில் தெரியாமல் வெச்சி செய்யும் அரவிந்த்சாமி.. அடேங்கப்பா பாஸ்கர் ஒரு ராஸ்கல் தான்

ரோஜா படத்தின் மூலம் பெண் ரசிகர்களை கவர்ந்த அரவிந்த் சாமி ஒரு சாக்லேட் பாயாக வலம் வந்தார். மென்மையான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த அரவிந்த் சாமி தற்போது வில்லன் அவதாரம் எடுத்து மிரட்டி வருகிறார். அதிலும் ஜெயம் ரவிக்கு வில்லனாக தனி ஒருவன் படத்தில் இவரது சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதைத் தொடர்ந்து சில படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். அதன்பிறகு அவரது படங்கள் வெளியாகாததால் பட வாய்ப்பு எதுவும் அரவிந்த்சாமிக்கு கிடைக்கவில்லை என கூறப்பட்டது. ஆனால் அரவிந்த்சாமி கைவசம் 7 படங்கள் வைத்திருக்கிறாராம். இந்த படங்கள் அடுத்தடுத்த ரிலீஸுக்கு தயாராக உள்ளதாம்.

இயக்குனர் ராஜபாண்டி இயக்கத்தில் கள்ளபார்ட் என்ற படத்தில் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா கெஸன்ட்ரா நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு கள்ளபார்ட் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதினால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை நிர்மல் குமார் இயக்கியுள்ளார். இதில் அரவிந்த்சாமி, திரிஷா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மனோபாலா இப்படத்தை தயாரித்துள்ளார். சில காரணங்களால் இப்படம் ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது.

மேலும் நான் அவன் இல்லை, குரு என் ஆளு படங்களை இயக்கிய செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ள படம் வணங்காமுடி. ஏற்கனவே சிவாஜி படம் இதே தலைப்பில் வந்துள்ளதால் அனுமதியின்றி இப்படத்திற்கு தலைப்பு வைத்ததாக வழக்கு தொடரப்பட்டது. மேலும் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் ரெண்டகம் என்ற படத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.

இதுதவிர தெலுங்கு, ஹிந்தி படங்களையும் அரவிந்த்சாமி கைவசம் வைத்துள்ளார். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் படங்கள் ரிலீசாகாமல் உள்ளது. இதனால் மிக விரைவில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி அடேங்கப்பா பாஸ்கர் ஒரு ராஸ்கல் தான் என அரவிந்த்சாமியை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட உள்ளனர்.

- Advertisement -

Trending News