Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அரவிந்த் சாமி மிஸ் செய்த இரண்டு முக்கிய படங்கள்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

aravind swamy

நடிகர் அரவிந்த் சாமி தனது திரை வாழ்வில் இரண்டு மெகா ஹிட் படத்தை மிஸ் செய்திருப்பதாக தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முதல் எண்ட்ரியை விட இரண்டாவது எண்ட்ரி மாஸ் ஹிட்டடிக்கும் என சொன்னால் சில காலம் முன்னர் நம்பவே முடியாது. முதல் அறிமுகத்தில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர்களுக்கு, ரீ எண்ட்ரி செம தோல்வியை மட்டும் தான் இதுவரை கொடுத்திருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தவர் அரவிந்த் சாமி.

முதல் எண்ட்ரியில் சாக்லேட் பாயாகவும், செகண்ட் எண்ட்ரியில் மிரட்டல் நாயகனாகவும் தெறிக்கவிட்டு கொண்டிருக்கிறார். சாதுவாக நடித்து புகழ்பெற்ற அரவிந்த் சாமி, கடல் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கால் பதித்தார். அவருக்கு நல்ல வரவேற்பு அமைந்தது. அப்போது கிடைத்தது தான் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன். படத்தில் ஜெயம் ரவி தான் நாயகன் என்றாலும் அரவிந்த் சாமியை தான் பலர் ரசித்தார்கள். அவரின் நடிப்புக்கு பல தரப்பிலும் பாராட்டுகள் குவிந்தது. இதை தொடர்ந்து, அவருக்கு தமிழில் பல வாய்ப்புகள் குவிந்தன. தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருக்கிறார்.

இந்நிலையில், தனது சமீபத்திய பேட்டியில் அரவிந்த் சாமி மிஸ் செய்த படங்கள் குறித்த சுவாரசிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். ஆனால், அவை சாதாரண படங்கள் இல்லை இன்று வரை பலராலும் ரசிக்கப்பட்டு வரும் மெகா ஹிட் படங்கள் என்பது தான் இத்தகவலின் கூடுதல் சுவாரசியமே. இதுகுறித்து, அரவிந்த் சாமி பேசுகையில், கமல் சாருடன் தனக்கு இரண்டு பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்த நேரத்தில் நான் வேறு படங்களில் இருந்ததால் என்னால் அதனை ஒப்புக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. அன்பே சிவம், தெனாலி ஆகிய முக்கிய படங்கள் எனக்கு கிடைத்தது. அதை நான் தவறவிட்டேன். தெனாலி படத்தில் ஜெயராம் சார் என்னை விட நன்றாகவே பண்ணி இருந்தார். நாம் வேண்டாம் என சொல்லும் படங்கள், அப்படத்திற்கு நல்லதாக அமையும் என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

அதைப்போல, சேரனின் திரை வாழ்வில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஆட்டோகிராப் படம் தனக்கு கிடைத்தது. ஆனால் நான் சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்த சமயத்தில் வந்த வாய்ப்பு அது. ஏற்கனவே நடிக்க வேண்டாம் என அப்போது முடிவு செய்ததால் என்னால் ஓகே சொல்ல முடியவில்லை. அதில் ஒரு நல்ல விஷயம், சேரன் நடிகராகி விட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top