fbpx
Connect with us

Cinemapettai

பொன்னியின் செல்வன் கேப்பில் ரோஜா 2 படத்தை இயக்கப் போகும் மணிரத்னம்.. ஹீரோ நம்ம அரவிந்த் சாமி தான்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் கேப்பில் ரோஜா 2 படத்தை இயக்கப் போகும் மணிரத்னம்.. ஹீரோ நம்ம அரவிந்த் சாமி தான்

மீண்டும் அரவிந்த்சாமி மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரது கூட்டணியில் வெளிவந்த படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

ரோஜா, பாம்பே, செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். அதுமட்டுமில்லாமல் தளபதி, கடல் போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். மணிரத்னம் தற்போது பெரும் பொருட்செலவில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் எப்போது தொடங்கப்படும் என்ற செய்தியும் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் அதற்கு இடையில் அரவிந்த் சாமியை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாக இருக்கும் அந்த திரைப்படத்தை அனேகமாக அரவிந்த்சாமி மணிரத்னம் கூட்டணியில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த ரோஜா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம்.

மேலும் இதற்கான கதையமைப்பில் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதாகவும், படத்தின் நாயகிகளான தேடுதலில் மணிரத்னம் இறங்கியுள்ளதாகவும் தெரிகிறது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்பு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அவரது வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Continue Reading
To Top