Connect with us
Cinemapettai

Cinemapettai

aravind-swamy-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமல் போல் 6 கெட்டப்புகளில் நடித்துள்ள அரவிந்த்சாமி.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் புதிய படம்

தனி ஒருவன் படத்திற்கு பிறகு அரவிந்த்சாமியின் சினிமா மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. மணிரத்தினத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் நல்லதொரு நடிகராக ஒரு காலகட்டம் வரை வலம் வந்தவர் அரவிந்த்சாமி.

ஆனால் நினைத்த அளவு அவரால் சினிமாவில் உச்சத்தை தொட முடியவில்லை. இதனால் தன்னுடைய தொழிலை பார்க்கச் சென்ற அரவிந்த்சாமி சில வருடங்களாக சினிமாவை விட்டு முற்றிலும் விலகி விட்டார்.

ஒரு கட்டத்தில் மோசமான தோற்றத்திற்கு மாறிய அரவிந்த்சாமி பிறகு உடல் எடையை குறைத்து மீண்டும் பழையபடி மாறினார். அதற்கு தகுந்தாற்போல் தனி ஒருவன் படத்தில் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரம் கிடைத்தது. இன்றைக்கும் சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரத்திற்கு அப்படி ஒரு வரவேற்பு இருந்து வருகிறது.

அந்த படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஹீரோவாகவும் வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார் அரவிந்த்சாமி. தமிழில் மட்டுமே ஏகப்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் அரவிந்த் சாமியின் அடுத்த வெளியீடாக இருப்பது வணங்காமுடி என்ற திரைப்படம்.

இந்த படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரித்திகா சிங், முக்கிய கதாபாத்திரத்தில் நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடித்துள்ளனர். போலீஸ் திரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள வணங்காமுடி திரைப்படத்தில் 6 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் அரவிந்த்சாமி. இந்த படத்தை நான் அவன் இல்லை படத்தை இயக்கிய செல்வா இயக்கியுள்ளார்.

சமீபத்தில் அரவிந்த்சாமியின் வணங்காமுடி படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் திடீரென புதிய பிரச்சனையால் அந்த படத்தின் வெளியீடு கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால் விரைவில் இந்த பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு திட்டமிட்டபடி ரிலீஸாகும் என்கிறார்கள் வணங்காமுடி படக்குழுவினர்.

aravind-swamy-vanangamudi-cinemapettai

aravind-swamy-vanangamudi-cinemapettai

Continue Reading
To Top