Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல அஜித்துடன் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. காரணம் இதுதான்.!
இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைய உள்ளனர். இந்த படத்திற்கு வலிமை என பெயர் சூட்டப்பட்டு சமீபத்தில் பூஜையும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அஜித் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்த்து கொண்டிருந்த நேரத்தில் உடல் எடையை குறைப்பதில் ஈடுபட்டுள்ளார். மேலும் கதைக்கு தேவையான கட்டுமஸ்தான உடலுக்காக தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் இன்னும் படபிடிப்பு தொடங்கவில்லை.
இந்நிலையில் படத்தினைப் பற்றிய ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தனி ஒருவன் படத்தில் வில்லனாக கலக்கிய அரவிந்த்சாமி தல அஜித்துக்கு வில்லனாக நடிக்க படக்குழுவினர் அணுகியுள்ளனர்.
ஆனால் ஏஎல் விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் தல60 படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதனால் படக்குழு சற்று அப்செட்டில் உள்ளது.
அவர் மட்டும் நடித்திருந்தால் படம் இன்னும் மாஸாக இருந்திருக்கும் என தல ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
