தளபதி படத்தில் அறிமுகமான நம்ம அரவிந்த் சாமி பற்றி அறிமுகம் தேவையில்லை. இப்ப வரைக்கும் பொண்ணுக பொதுவா சொல்ற வார்த்தை மாப்பிள்ளை அரவிந்த் சாமி மாதிரி செகப்பா இருக்கணும்கிறதுதாங்க.aravind swamy

அந்த அளவுக்கு உரிச்சு வைச்ச பழம் மாதிரி இருப்பார் நம்ம அரவிந்த் சாமி. கடல் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆன இவருக்கு அப்போ பெரிய வரவேற்பு இல்லாட்டாலும் தனி ஒருவன் இவரை டாப் கியர் போட்டு தூக்கிவிற்றுசுங்க.

அரவிந்த் சாமிக்கு இப்பவும் ஏகப்பட்ட பெண் ரசிகைகள் இருக்காங்க.. தினமும் அரவிந்த் சாமிக்கு சாட் பண்ற பெண்கள் எண்ணிக்கை அதிகரிச்சுகிட்டே போகுதாம்…bogan aravindswamy

இது பத்தி அவர் சொன்னபோது, எனக்கு இப்போது இருக்கும் ரசிகைகளை விட ரோஜா, பம்பாய் போன்ற படங்கள் வந்தபோதுதான் தீவிர ரசிகைகள் இருந்தனர். அது ஒரு மறக்க முடியாத காலம்.

அதில் ஒரு ரசிகை தன் ரத்தத்தினால் எனக்கு ஒரு மிக நீண்ட கடிதத்தை எழுதி இருந்தார். எனக்கு அதை பார்க்க ஆச்சர்யமா இருந்தது. நடிகனான என் மீது இவ்வளவு தீவிர அன்பா என்று. நான் அதற்கு பதில் ஏதும் எழுதவில்லை.

இருந்தாலும் இப்போவரைக்கும் ரசிகைனா எனக்கு அந்த பொண்ணுதான் ஞாபகத்துக்கு வரும். எனது இந்த வளர்ச்சிக்கு பெரிதும் காரணம் என்னை அறிமுகம் செய்த மணிரத்னமே.

நான்தான் அவர் படங்களில் அதிகம் நடித்த ஒரே ஹீரோ என்று நினைக்கிறேன் சரியாக தெரியவில்லை.” அப்டின்னு சொல்லிருக்கருங்க.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: போக போக போகன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான். சொல்றது புரியாட்டி விட்றுங்க….

அதிகம் படித்தவை:  மனதை உருக்கும் இயக்குனர் ராமின் பேரன்பு டீஸர் 02 !