தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி தான் இவர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் காலா, இந்த படத்தை இயக்குனர் ரஞ்சித் தான் இயக்கியுள்ளார், காலா படத்தை முதலில் ஏப்ரல் 27 ம் தேதி தான் ரிலீஸ் செய்ய திட்டம் போட்டார்கள்.

baskar

அதற்க்கு இடையில் ஸ்ட்ரைக் போராட்டங்கள் என பல சம்பவம் நடந்து விட்டது , இந்த நிலையில் காலா படத்தின் ரிலீஸ் தேதியை வருகிற ஜூன் 7 ம் தேதி தள்ளி வைத்துள்ளார்கள் படக்குழு, தற்பொழுது காலா ரிலீஸ் தள்ளி போனதால் அந்த தேதியில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் மற்றும் பக்கா ஆகிய 2 படமும் ரிலீஸ் செய்ய திட்டம்மிட்டுல்லார்கள்.

அதிகம் படித்தவை:  சன் டிவிக்கு வேண்டுகோள் வைக்கும் - ஜானகி தேவி என்கிற திரிஷா.
pakka
pakka

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை சித்திக் இயக்கியுள்ளார் படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். அதேபோல் பக்கா படத்தை எஸ்.எஸ்.சூர்யா இயக்கியுள்ளார் பக்கா படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி பிந்து மாதவி என இரண்டு நடிகைகள் நடித்துள்ளார்கள் இந்த இரண்டு படத்தின் பாடல், ட்ரைலர் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  முதல் படம் ஹிட் ஆனதும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.!