விஜய் டிவி சீரியலுக்கு வரும் அறந்தாங்கி நிஷா.. வெளியான சூட்டிங் ஸ்பாட் போட்டோ

விஜய் டிவி காமெடி நிகழ்ச்சியின் மூலம் நமக்கு அறிமுகமானவர் பட்டிமன்ற பேச்சாளரான அறந்தாங்கி நிஷா. அவருடைய எதார்த்தமான பேச்சு, டைமிங் காமெடி என்று மக்களை பெரிதும் ரசிக்க வைத்தது.

அதன்பிறகு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அதில் அர்ச்சனாவின் அன்பு கூட்டணியுடன் இணைந்து செயல்பட்டு மக்களின் வெறுப்புக்கு ஆளானார். தற்போது நிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் டாடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா கேரக்டரில் நடித்து வரும் குழந்தையுடன், நிஷா இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது மிகவும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி மற்றும் கண்ணம்மாவை சேர்த்து வைக்க பாரதியின் அம்மா சௌந்தர்யா பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த காட்சிகள் பார்ப்பதற்கு மிகவும் காமெடியாக இருக்கிறது.

இந்நிலையில் காமெடியில் கலக்கும் நிஷாவும் இந்த சீரியலில் இணைய இருப்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. ஏற்கனவே இவர் கோலமாவு கோகிலா உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வந்த இவர் தற்போது சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

நிஷா சீரியலில் என்ன கேரக்டரில் நடிக்க உள்ளார் என்று அவரின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். நிஷா வரும் எபிசோடுகள் விரைவில் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. நிஷாவின் வருகை சீரியலுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

arandhanginisha
arandhanginisha
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்