ராமநாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியீடான ’கதகளி’ ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. விஷால்–கேத்தரின் தெரசா நடித்துள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார்.

அடுத்து தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் ‘அரண்மனை–2’ வருகிற 29–ந்தேதி உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. சுந்தர்சி இயக்கி நடிக்கும் இந்த படத்தில் நாயகனாக சித்தார்த், நாயகிகளாக திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி நடிக்கிறார்.

அதிகம் படித்தவை:  தளபதிக்காக உருவாக்கிய படத்தில் அவர் நடிக்கவில்லை - மன வேதனையில் இயக்குநர் சுந்தர்.சி.

பேய் படமான ‘அரண்மனை’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் இரண்டாம் பாகமான இதுவும் திகில் கலந்த கலகலப்பான பேய் படமாக உருவாகி இருக்கிறது. திரிஷா முதல் முதலாக நடிக்கும் பேய் படம் இது.

அதிகம் படித்தவை:  பணம் கேட்ட நடிகர்...!!!அடியாட்களை வைத்து மிரட்டிய இயக்குனர் சுந்தர்.சி

சுந்தர் சி இயக்கத்தில் முக்கிய நடிகர்– நடிகைகள் நடித்திருப்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ‘அரண்மனை–2’ தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகாவிலும் மற்ற வடமாநிலங்களிலும் உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் ‘அரண்மனை–2’ படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.