fbpx
Connect with us

“தள்ளிப் போகாதே” நயன்தாராவை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.!

News / செய்திகள்

“தள்ளிப் போகாதே” நயன்தாராவை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.!

‘அறம்’ என்று படத்துக்கு தலைப்பிட்டது ஏன் என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்திருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று புகார் தெரிவித்தவர் கோபி. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் தயார் செய்துள்ள கதை தற்போது நயன்தாராவை வைத்து படமாக்கப்பட்டு வருகிறது.

பெயர் வைக்காமலேயே ராமநாதபுரத்தில் பெரும்பகுதி படமாக்கப்பட்ட நிலையில் இப்பட த்துக்கு ‘அறம்’ என்று பெயரிட்டுள்ளனர்.

nayanthara

அறம் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளதால், ‘தள்ளிப்போகாதே…!’ என நெட்டிசன்கள் நயன்தாராவை கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

டோரா படத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் அறம். கோபி நயினார் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ளார்.

மேலும், காக்கா முட்டை புகழ் விக்னேஷ், ரமேஷ், எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

nayanthara

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, நயன்தாரா கதாப்பாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை கே.ஆர்.ஜே.ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார்.

சமீபத்தில், படக்குழுவால் ட்விட்டப்பட்ட பாடல்களும், இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டிய டீசரும் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது.படத்தை பார்த்த சென்சார் குழுவினர் யு’சான்றிதழ் அளித்துள்ளனராம்.

nayanthara

முதலில் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். பின்னர், நவம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். தற்போது, மீண்டும் படத்தின் ரிலீஸை நவம்பர் 10-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், பொறுமையிழந்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக,’தள்ளிப் போகாதே…!’ என சிம்பு படப் பாடலைப் பாடி நயனை கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top