Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்னது பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து பாட்டு இல்லையா.? யோவ் நெல்சன் டோட்டலா கவுத்துட்டியேயா!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்திருக்கும் படம் தான் பீஸ்ட். இந்த படத்தின் வெளியீட்டிற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பீஸ்ட் படம் தொடர்பான பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான அரபிக் குத்துப்பாடல் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதுவரை வந்த பாடல்களில் இப்படி ஒரு சாதனையை எந்த ஒரு பாடலும் செய்ததில்லை என்று கூறியிருக்கிறது.
இந்த அரபிக் குத்துப்பாடல் பெரியத்திரையில் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் திரையில் காண மிகுந்த ஆர்வத்தோடு காத்துக்கொண்டு இருக்கின்றனர். விஜய்யின் அந்த டான்ஸ் மூவை பெரிய திரையில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். பூஜா ஹெக்டே மிக அழகாக இந்தப் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக இந்தப்பாடலின் வீடியோ மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டு இருக்கிறது.
இப்படிப்பட்ட இந்தப் பாடலைப் பற்றி தான் சமூக வலைதளங்களில் அனைவரும் பேசி வருகின்றனர். பலரும் இன்ஸ்டாகிராம் , ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளப்பக்கங்களில் ரீல்ஸ்களாக இந்த பாடலை மேலும் பரப்பி வருகின்றனர். இப்படி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடலை நெல்சனின் ஸ்டைலில் படத்தின் இடையில் வைக்காமல் படத்தின் கிளைமாக்ஸ் முடிந்த பிறகுதான் இந்த பாடல் வரும் என்ற தகவல் நம்பத்தகுந்த வட்டாரங்களில் வழியாக தெரியவந்திருக்கிறது.
அட என்னையா சொல்றீங்க இவ்வளவு சூப்பர் பாடலை ஏன் இறுதியில் வைக்க வேண்டும் என்று கேட்கும் ரசிகர்களுக்கு நெல்சனின் ஸ்டைல் கண்டிப்பாக தெரிந்திருக்கும். இதற்கு முன்னால் நெல்சன் திலீப் குமார் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். படம் முழுக்க சீரியசாக இருக்கக்கூடிய கதையில் இடையில் பாட்டை சொருகினால் படத்தின் திரைக்கதையில் தொய்வு ஏற்படும் என்று கருதி அந்த படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக மிகப் பிரபலமாக பேசப்பட்ட செல்லம்மா பாடல் படத்தின் கிளைமாக்ஸ் முடிந்த பிறகுதான் அந்த பாடல் வந்தது. அந்த ஐடியாவை தான் தற்போதும் கையில் எடுத்திருக்கிறார் நெல்சன் திலீப் குமார்.
அதுமட்டுமின்றி படத்தில் விஜய் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் இதற்கு முன்பாகவே கசிந்து இருந்தது. எனவே காஷ்மீர் தீவிரவாதிகள் உடன் விஜய் சீரியசாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது இந்தப் பாடல் காதல் பாடல் ஆக இருப்பதால் இடையில் இந்த பாடல் வந்தால் கண்டிப்பாக படத்தின் திரைக்கதையில் தொய்வு ஏற்படும் என்று தான் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம் நெல்சன் திலீப்குமார்.
அப்போது புரமோசனுக்காக தான் விஜய்யை வைத்து இந்த பாடலை படத்தின் வெளியீட்டுக்கு முன்பாகவே நெல்சன் திலீப்குமார் வெளியிட்டிருக்கிறார். எப்படியோ பாடலையும் ஹிட் ஆக வைத்து அதையும் விளம்பர யுக்தியாக பயன்படுத்திவிட்டார் நெல்சன் திலீப்குமார்.
இப்படிப்பட்ட இயக்குனர்களை தான் இன்றைய தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். கிடைக்கிற கேப்பில் எல்லாம் காசாக மாற்றுகின்ற நெல்சனின் இந்த யுக்தி கண்டிப்பாக தமிழ் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும். இருந்தாலும் படத்தின் கதையோடு கதையாக இந்தப் பாடலை வைத்திருக்கலாம் என்று அவரது ரசிகர்கள் உருகத்தான் செய்கின்றனர்.
