ஜிவி பிரகாஷ் எவ்வளவோ அட்ஜெஸ்ட் பண்ணி போனாரு.. மகனின் விவாகரத்து குறித்து மனம் திறந்த ஏ ஆர் ரெஹானா

GV Prakash: சமீப காலமாக நட்சத்திர ஜோடிகளின் விவாகரத்து செய்தி தமிழ் சினிமா ரசிகர்களை பதற வைத்துக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமான ஒரு ஜோடி சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ். இசையாலே காதல் ஜீவி ஆக்கும் சைந்தவியே என்ற வரிகளுக்கு உயிர் கொடுத்து வாழ்ந்தவர்கள் இந்த ஜோடி.

பள்ளி பருவத்தில் இருந்தே இருவருக்கும் மன காதல், இருவருக்குமே இசையின் மீது நாட்டம் என இவர்களுடைய திருமண வாழ்க்கைக்கு முந்தைய அடித்தளம் நன்றாகவே அமைந்திருந்தது. சினிமாவில் இருவரும் அறிமுகமாகி ஒரு சில வருடங்கள் பணியாற்றியும் காதலிக்கிறார்கள் என்பது தெரியாத அளவுக்குத்தான் இந்த ஜோடி இருந்தது.

இரு வீட்டார் சம்மதத்துடன் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அன்வி என்ற பெண் குழந்தை பிறந்தது.

மகனின் விவாகரத்து குறித்து மனம் திறந்த ஏ ஆர் ரெஹானா

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் மனம் ஒத்து பிரிவதாகவும், சக பெற்றோராக குழந்தையின் நலனுக்காக எல்லாவற்றையும் செய்வதாகவும் அறிவிப்பு கொடுத்திருந்தார்கள்.

அதன் பின்னர் இரு தரப்பிலிருந்துமே எந்த ஒரு விளக்கமும் இதற்காக கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷின் அம்மா மற்றும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் சகோதரி ஏ ஆர் ரெஹானா சமீபத்திய பேட்டி ஒன்றில் இது பற்றி பேசி இருக்கிறார்.

அதில் இவர்கள் இருவருமே இணைய வேண்டும் என இருவரும் தான் முடிவெடுத்தார்கள். அதேபோன்று பிரிய வேண்டும் என்பதும் இருவரது முடிவு தான். சைந்தவி மிகவும் நல்ல பெண். என் மகளிடம் அதிகமாக பேசுவதைவிட நான் சைந்தவி இடம் தான் அதிகமாக பேசியிருக்கிறேன்.

சைந்தவி அற்புதமான பெண், என் மகனும் அட்ஜஸ்ட் பண்ணி அந்த பெண்ணுடன் இருந்தான். ஒரு கட்டத்தில் அவனுக்கு அட்ஜஸ்ட் பண்ணுவது கடினமாக இருந்தது. இந்த பிரிவெல்லாம் எதற்காக நடக்கிறது என எனக்கு தெரியவில்லை. எப்படி இருந்தாலும் சைந்தவி மீண்டும் வீட்டிற்கு வர வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன் என ஏ ஆர் ரெஹானா கூறி இருக்கிறார்.

விவாகரத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ், சைந்தவி

- Advertisement -spot_img

Trending News