செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

29 ஆண்டுகால திருமண வாழ்க்கை.. ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி எடுத்த முடிவு.. சினிமாத்துறையினர் அதிர்ச்சி

ஏ.ஆர்.ரஹ்மானை விட்டுப் பிரிவதாகவும் தங்களின் 29 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

இந்திய சினிமாவைத் தாண்டி ஹாலிவுட்டுக்குச் சென்று ஆஸ்கர் விருதையும் வாங்கி ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை சேர்ந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் 7 தேசிய விருதுகளும், பலமுறை ஃபிலிம்பேர் விருதுகளும் வாங்கியுள்ளார். ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் முன்னோடியாகவும், இந்திய சினிமாவின் இசையமைப்பை புரட்டிப் போட்டவருமாக ஏ.ஆர்.ரஹ்மான் கொண்டாடப்பட்டு வருகிறார்.

ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானுவுடன் திருமணமானது. பெற்றோர் பார்த்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் திறமையிலும் கெட்டிக்காரர் என்றால் சாய்ரா பானு படிப்பிலும், ஆங்கிலம் பேசுவதிலும் திறமை வாய்ந்தவர்.

ஏ.ஆர்.ரஹ்மான், அவரது அம்மா ஆகியோர் சாய்ரா பானுவை பெண் பார்க்க சென்றபோது, ”ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆங்கிலம் தெரியுமா, கார் டிரைவிங் தெரியுமா?” என்றுதான் சாய்ரா பானு கேட்டதாக ஒரு நிகழ்ச்சியின்போது கூறியிருந்தார். திரைத்துறையில் உள்ள தம்பதியரில் அனைவருக்கும் முன்மாதிரியான ஜோடியாக, கணவன் மனைவியாக, நல்ல பெற்றோராக எல்லோராலும் பார்க்கப்பட்டு, பாராட்டப்பட்டு வந்தவர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு தம்பதியர். இவர்களுக்கு கதீஹா, ரஹீமா மற்றும் அமீன் என 3 குழந்தைகள் உள்ளனர்.

ஏ.ஆ.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக சாய்ரா பானு அறிவிப்பு

இந்த நிலையில், ஏ.ஆ.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக சாய்ரா பானு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பல ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து, தன் கணவர் ஏ.ஆ.ரஹ்மானிடமிருந்து பிரியும் முடிவை சாய்ரா எடுத்திருக்கிறார். அவர்களுடைய உணர்வு ரீதியாக அழுத்தத்துக்குப் பின், எடுக்கப்பட்ட முடிவே இது.

சில தவிர்க்க முடியாத சூழல் இடைவெளியை உருவாக்கியுள்ன என்பதை அவர் கண்டறிந்துள்ளனர். இதை சரிசெய்ய முடியாது என்ற நிலையில், வேதனையுடன் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். இக்கடினமான எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ் சினிமாவில், தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி, ஜெயம்ரவி – ஆர்த்தி ஜோடி, ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி, பார்த்திபன் – சீதா ஆகியோர் விவாகரத்து செய்த நிலையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ராவும் விவாகரத்து செய்வதாக அறிவித்திருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

a.r.rahman, sairan banu

- Advertisement -

Trending News