இந்தியாவில் பிரீமியர் பட்ஸல் லீக் என்ற உள்ளரங்க கால்பந்து தொடர் வரும் ஜூலை 15 மாதம் ஆரம்பமாகவுள்ளது.இதன் விளம்பர தூதராக கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் அறிவிக்கப்பட்டார்.

இந்த விளையாட்டை பிரபலப்படுத்தம் வகையில் ஏ.ஆர். ரகுமான் இசையில் ஒரு பாடல் உருவாக இருக்கிறது.இந்த பாடலை பல பாடகர்கள் பாடவுள்ள நிலையில் அவர்களில் ஒருவராக விராத் கோஹ்லியும் இந்த பாடலின் ராப் பகுதியை பாடவுள்ளார்.

விராத்கோஹ்லிக்காக ராப் பகுதியை எளிமையாக்கியுள்ளதாகவும், அவர் பேட்டிங்கில் சிறந்து விளங்குவது போல் பாடல் பாடுவதிலும் சிறந்து விளங்குவார் என்று நம்புவதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.