சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. இப்படத்தை இயக்குனர் பார்த்திபன் இயக்கி இருந்தார். பல முன்னணி நட்சத்திரங்களும் படத்தில் நடித்திருந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு செல்லவில்லை. சமீப காலமாக சந்தனு நடித்த எந்த திரைப்படமும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சாந்தனு தற்பொழுது நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் முப்பரிமாணம். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. இப்படத்தை அதிரூபன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்கள் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஒரு பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் வெளியீட இருக்கிறார். இது குறித்து சாந்தனு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “என்னுடைய மிகப்பெரிய அடையாளமான ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் என்னுடைய முப்பரிமாணம் படத்தின் ஒரு பாடலை வெளியீட இருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.