Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபலத்தின் கற்பனையை திருடி காசாக்கிய ஏ ஆர் ரகுமான்.. நீங்களுமா சார்!
சினிமாவை பொறுத்தவரை ஒருவரின் கற்பனையை திருடி மற்றொருவர் காசாக்குவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் மிகவும் நம்பிக்கை கொண்ட ஆட்கள் அந்த மாதிரி செய்வது தான் பலருக்கும் ஏமாற்றமாக உள்ளது.
அந்த மாதிரி ஒரு விஷயம் தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏ ஆர் ரகுமான் ஒரு பிரபலத்தின் கான்செப்டை திருடி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளது அவர் மீதான நற்பெயரை குறைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் இருந்து இரண்டு முறை ஆஸ்கார் வென்று தமிழ் சினிமாவுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்தவர் ஏ ஆர் ரகுமான்(ar rahman) என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படிப்பட்ட ஏ ஆர் ரகுமான் ஒருவரின் கான்செப்ட்டை திருடி படம் தயாரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
கடல்புறா எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பாபு கணேஷ். முதல் முறையாக தியேட்டரில் ஒரு காட்சியின் போது அந்த காட்சியை ரசிகர்கள் ஸ்கிரீனில் காட்டும் வாசத்தை போல நிஜத்தில் உணர்ந்து கொண்டே பார்க்கும்படி தியேட்டரில் வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தினார்.
அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு நானே வருவேன் என்ற பேய் படத்தில் பேய்க்கு பிடித்த பூவான தாழம்பூவின் மனத்துடன் அந்த காட்சிகளை விவரித்தார். தற்போது அந்த மாதிரி படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த காட்சியை உணர்வதற்கான இந்த கான்செப்டை ஏ ஆர் ரகுமான் திருடி லீ மஸ்க் எனும் படத்தில் தயாரித்து இருந்தார் என குற்றம் சாட்டியுள்ளார்.
எட்டு வருடங்களுக்கு மேலாக இமெயில் வழியாகவும், சினிமா சங்கங்கள் வழியாகவும் கேள்வி எழுப்பி எந்த பயனும் இல்லை என மனமுடைந்துள்ளார் அந்த பாபு கணேஷ். ஏ ஆர் ரகுமான் இது பற்றி விரைவில் விவரிக்கவில்லை என்றால் அவர் என் மீது தவறான எண்ணங்கள் மக்களுக்கு வர நேரிடும்.
