Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியின் கையில் என்னுடைய செல்ல மகள்.. 21 வருடம் கழித்து ஏ ஆர் ரகுமான் பகிர்ந்த பொக்கிஷமான புகைப்படம்
இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகராக இருப்பவர் ரஜினி. அன்றைய காலம் முதல் இப்போது வரை ரஜினியின் ஸ்டைலுக்கு பலரும் அடிமை.
அதே போல் இந்திய சினிமாவை ஹாலிவுட் அரங்கில் பெருமைப்படுத்தியவர்தான் ஏ ஆர் ரகுமான். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று மிரள வைத்தார்.
அதேபோல் ரஜினி மற்றும் ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
முத்து, படையப்பா, சிவாஜி, எந்திரன், 2.o போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த அனைத்து படங்களிலும் ஏ ஆர் ரகுமானின் இசை தரமாக இருக்கும்.
இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 21 வருட பொக்கிஷமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் ஏ ஆர் ரகுமானின் மகள் கடிஜா, ரஜினியின் கையில் கொஞ்சி விளையாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் உற்சாகப் படுத்தி உள்ளார். இந்த புகைப்படம் படையப்பா படத்தின் போது எடுக்கப்பட்டது எனவும் பகிர்ந்துள்ளார்.

rajikanth-arrahman-daughter-cinemapettai
